உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பெரிய புராண ஆராய்ச்சி.pdf/152

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

154 பெரியபுராண ஆராய்ச்சி இச் செய்திகள் சேக்கிழார்க்கு முற்பட்ட நூல்களில் இல்லை. இவை சோழ மன்னர்களைப் பற்றிய செய்திகள் ஆதலின், சோழப் பேரரசின் முதல் அமைச்சராகிய சேக்கிழார். தக்க சான்றுகள் கொண்டு உண்மை தெளிந்து இச் செய்திகளைத் தொகுத்தனர் என்று கோடலே பொருத்தமானது. 6. ஐயடிகள் காடவர்கோன் இவர் (1) வடமொழி தென்மொழிகளில் வல்லவர் (2) வடபுலம் கைக்கொண்டவர் (3) மகனிடம் அரசை ஒப்புவித்துச் சிவத்தல யாத்திரை செய்தவர் என்பன நுட்பமான செய்திகள். இவை சேக்கிழார்க்கு எங்ங்னம் கிடைத்தன? பல்லவப் பேரரசு ஒழிந்த பிறகு அம்மரபினர் ஆதித்தன் காலமுதல் சோழப் பேரரசில் உயர் அலுவலாளராக வேலை பார்த்து வந்தனர். அவருள் சேக்கிழார் காலத்துப் பல்லவன்-மோகன் ஆட்கொல்லி என்ற குலோத்துங்க சோழக் காடவராயன் என்பவன். அவன் நிலைமை சேக்கிழார் காலத்தில் படிப்படியாக உயர்ந்தது என்பது அவனுடைய கல்வெட்டுக்களால் நன்கு புலனாகிறது. அவன் மரபில் வந்தவனே சோழப் பெருநாட்டைக் கி.பி. 13-ஆம் நூற்றாண்டில் நடுங்கவைத்துச் சோழப் பேரரசனைச் சிறை செய்த கோப்பெருஞ் சிங்கன். அக்காடவராயன் திருநாவலூர், திருவதிகை, திருமுதுகுன்றம் முதலிய இடத்துச் சிவன் கோவில்கட்குத் திருப்பணி செய்த சிவபக்தன். அவன் காஞ்சிப் பல்லவர் மரபினன் ஆதலின், சேக்கிழார் அவன் வாயிலாக, அவன் முன்னோரான ஐயடிகள் காடவர்கோனைப் பற்றி அவன் மரபில் வழி வழியாகச் சொல்லப்பட்டு வந்த வரலாற்றைத் தெரிந்திருக்கலாம். இன்று சிதைந்த நிலையில் நமக்குக் கிடைத்துள்ள ஐயடிகள் பாடிய "க்ஷேத்திர வெண்பா" கேக்கிழார் காலத்தில் நன்னிலையில் இருந்திருக்கலாம், அதன் பாயிரத்தில் ஐயடிகளைப் பற்றிய மேற்சொன்ன குறிப்புகள் எழுதப்பட்டிருக்கலாம். இவ்விரண்டில் ஒன்றின் மூலமாகவே சேக்கிழார் இக்குறிப்புகள் தொகுத்தார் எனக் கொள்ளலாம். 2. பிற்காலச் செய்திகள் (கி.பி. 600-865) அப்பர் - (1) இவர் காலத்து அரசன் குணபரன் என்ற விருதுப் பெயர் பூண்டவன் (2) அவன் முதலில் சமணனாக இருந்தவன் (3) பின்னர்ச் சைவனாக மாறினவன் (4) பாடலியில் (பாதிரிப் புலியூரில் இருந்த சமணப்பள்ளி, பாழிகளை இடித்து, அச் சிதைவுகளைக் கொண்டு திருவதிகையில் குணபர ஈசுவரம் கட்டினான் என்பது சேக்கிழார் வாக்கு இக் குறிப்புக்கள் சென்ற ஐந்தாம் பிரிவிற் கூறப்பட்டவையே.