உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பெரிய புராண ஆராய்ச்சி.pdf/153

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நாயன்மார் பற்றிய செய்திகள் 155 (1 குணபரன் பல்லவன் என்ற முதலாம் மகேந்திரவர்மன் என்பதும் முற்கூறப்பட்டது (2) அவன் முதலில் சமணனாக இருந்தவன் என்பதற்குச் சித்தன்னவாசல் சிற்பங்களும் ஓவியங்களும் திருச்சி மலையில் சமணர் உபயோகித்த குகை ஒன்றில் உள்ள கல்வெட்டுகளும் தக்க சான்றாகும் (3) திருச்சி குகைக் கோவிலிலுள்ள வடமொழிச் சுலோகமே அவன் சைவனானமைக்குத் தக்க சான்றாம். அது ஐந்தாம் பிரிவிற் கூறப்பட்டது. அத்துடன் இசையைப் பற்றிய அவனது குடுமியான்மலைக் கல்வெட்டின் தொடக்கம் "சித்தம் நமஸிவாய" என்று இருப்பதும் குறிக்கத்தக்கது." (4) மகேந்திரனுக்கு முன்பே பல நூற்றாண்டுகளாகத் திருப்பாதிரிப்புலியூரில் சமணமடம் இருந்து வந்தது என்பது "சர்வநந்தி" என்ற திகம்பர சமணர் அம்மடத்தில் இருந்து எழுதிய "லோக விபாகம்" என்ற நூலைக்கொண்டு அறியலாம். அந்நூல் கி.பி. ஐந்தாம் நூற்றாண்டின் இடையிற் செய்யப்பட்டது." சிம்ம சூரி, சர்வநந்தி போன்ற புகழ்பெற்ற திகம்பர சமண ஆசாரியர் பலர் அம்மடத்தில் இருந்தவராவர். இம்மடம் திகம்பர சமணர் மடந்தான் என்பது அப்பருடைய பாக்கள் பலவற்றால் அறியலாம், காவிசேர் கண்மடவார் கண்டோடிக் கதவடைக்குங் கள்வனேன், நாணற்றார் நள்ளாமே விள்ளப் பெற்றோம். இப் புகழ்பெற்ற சமண மடம், சமணத்திலிருந்து சைவனான மகேந்திரவர்மனால் அழிக்கப்பட்டது உண்மையாகலாம். என்னை? அம் மடத்தின் சிதைவுகளும் சமணர் சிலை ஒன்றும் இன்றும் பாதிரிப் புலியூர்க்கு அண்மையில் திருவந்திபுரம் போகும் பாதையருகில் காணக்கிடக்கின்றன ஆதலாலும் மகேந்திரனுக்குப் பிறகு அம்மடத்தைப்பற்றி வரலாற்றில் ஒன்றும் கூறப்படாமையாலும் என்க. இவையன்றி, அச்சிதைவுகளைக் கொண்டு மகேந்திரன் கட்டியதாகக் கூறப்படும் குணபரஈசுவரம் இன்றும் திருவதிகையில் காட்சியளித்தல் காணலாம். சிறுத்தொண்டர் (1) இவர் மாமாத்திரர் மரபினர். வைத்தியக் கலை, வட நூற்கலை, படைக்கலப் பயிற்சிகளிற் சிறந்தவர் (2) தம் மன்னற்காகப் பல போர்கள் செய்தவர் (3) ஒரு முறை படையுடன் சென்று வாதாபித் தொன்னகரைத் தூளாக்கினார் (4) பிறகு அவர் தம் பதியாகிய செங்காட்டங்குடி அடைந்தாார். தமது ஊரில் கணபதீச்சரத்துக் கடவுளை இறைஞ்சி வாழ்ந்தார். இவை சேக்கிழார் தந்த குறிப்புகள்." - 1. மாமாத்திரர் என்பது 'மகாமாத்திரர்’ என்பதன் மரூஉமொழி. "மகாமாத்திரர்" என்பவர் அரசியல் மந்திராலோசனைச் சபையினர். அரசர் அவரைக் கலந்தே போர்ச் செலவு (யுத்த யாத்திரை செய்வதோ, வேறு செயல்களிற் புகுவதோ பண்டை மரபாகும். இவ்வமைச்சர் பல கலைகளில் வல்லுநராகவும் சிறந்த போர் வீரராகவும் நற்குடிப் பிறப்புடையவராகவும் இருத்தல் வேண்டும் என்பது மநுதர்மசாத்திரம்." சிறுத்தொண்டர்