உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பெரிய புராண ஆராய்ச்சி.pdf/154

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

156 பெரியபுராண ஆராய்ச்சி இவ்விலக்கணம் முழுவதும் அமையப்பெற்றவர் என்பதனைச் சேக்கிழார் எவ்வாறோ தக்க சான்று கொண்டு கூறியுள்ளமை நோக்கத் தக்கது. 2. இவர் வாதாபியை அழித்தார் என்பதால், முதலாம் நரசிம்மவர்மன் தானைத்தலைவர் என்பது பெற்றாம். இவர் அவனுக்காகப் பல போர்கள் செய்தார் என்று சேக்கிழார் கூறுவதற்கு ஏற்ப, அவ்வரசன் சேர, சோழ, பாண்டிய, களப்பிரருடன் போரிட்டான் என்று கூரம் பட்டயம் குறிக்கின்றது." அவன் கங்க அரசனான பூவிக்ரமனோடும் போரிட்டான் என்பது கங்கர் கல்வெட்டால் தெரிகிறது. இப் போர்களில் சிறுத்தொண்டர் ஈடுபட்டிருக்கலாம். வாதாபியை அழித்தமை வாதாபியில் நரசிம்மவர்மனது 13 ஆண்டு ஆட்சியைக் குறித்த வெற்றித் தூண் உண்டு. வாதாபிப் போர் கி.பி. 642இல் நடந்ததாகக் கருதப்படுகிறது. ஆகவே, அந்நகரம் சுமார் கி.பி. 642-655 வரை பல்லவர் கையில் இருந்ததாகும். வாதாபிப் படையெடுப்பில் தோற்ற இரண்டாம் புலிகேசியின் மகனான முதலாம் விக்கிரமாதித்தனது கர்நூல் பட்டயம், இரண்டாம் புலிகேசி பகைவர் மூவரால் தோல்வியுற்றான் . வாதாபியில் இருந்த கோவில்கள் பகைவர் ஆட்சியில் வருவாய் இன்றித் தவித்தன" என்று கூறுகின்றது. இந்த விக்கிரமாதித்தன் மகனான விநயாதித் தனது லோரப்-பட்டயம், சாளுக்கியர் மரபின் அழிவிற்கும் தாழ்விற்கும் பல்லவர்களே பொறுப்பாளிகள்" என்று முறையிட்டுள்ளது. இரண்டாம் கீர்த்திவர்மனுடைய வக்கலேரிப் பட்டயம், எங்கள் சாளுக்கிய முன்னோர் சிறப்பை அழித்தவர் பல்லவர். அவர்கள் எங்கள் ஜன்மப் பகைவர்" என்று குறித்துள்ளது. சேக்கிழார் கூறியாங்குத் தொன்னகரமாகிய வாதாபி துகளாக்கப்பட்டுப் பல்லவர் கைப்பட்டமையாற்றான், மேற்சொன்ன சாளுக்கியப் பட்டயங்களில் அவர்தம் புலம்பலோசை கேட்கப்படுகின்றது என்பதை இப்பொழுது நன்குணரலாம். கணபதிச்சரம் 'இக்கோவில் உத்தராபதீசர் கோவிலுக்குள் சிறிய கோவிலாக இருக்கிறது. இதன் சுவர்களிற்றாம் சோழர் கல்வெட்டுக்கள் காண்கின்றன. இதனைத் தன் அகத்தே கொண்ட உத்தராபதீசர் கோவிற் சுவர்களில் விசயநகர அரசர் கல்வெட்டுக்கள் காண்கின்றன. முதல் இராசராசன் காலமுதல் இக் கணபதீச்சரம் சிறப்புற்றதாகத் தெரிகிறது. சித்திரை விழாவில் அடியாரை உண்பிக்கச் சிறுத்தொண்ட நம்பி மடம் கட்டப்பட்டது. சீராளதேவர் என்ற சிவபிரானுக்கும் வீரபத்திரர்க்கும் தொண்டு செய்து வந்த சிறுத்தொண்ட நம்பிக்கு விழாச் செய்யப்பட்டு வந்தது. உத்தராபதியார் சிறுத்தொண்டர் மாளிகையில் உபசரிக்கப்பட்டார். அதனால் இன்றைய உத்தராபதீசர் கோவில் சிறுத்தொண்டரது மாளிகை இருந்த இடம் எனவும், கணபதீச்சரப் பெருமான்