உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பெரிய புராண ஆராய்ச்சி.pdf/155

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நாயன்மார் பற்றிய செய்திகள் 157 சீராள தேவர் என்று பெயர் கொண்டவர் எனவும், அக்கடவுள் பெளரையே சிறுத்தொண்டர் தம் மகனுக்கு இட்டார் எனவும் கூறலாம். சிறுத்தொண்டர் வரலாற்றில் உள்ள தெய்வீகச் செயல் ஒழிந்த ஏனைய அனைத்தும் இங்ங்ணம் கல்வெட்டுச் சான்று கொண்டனவாகக் காண்கின்றன என்பது இங்கு அறியத்தக்கது." மிழலையிற் பஞ்சம் நம் கணக்குப்படி சம்பந்தர் சிறுத்தொண்டரைச் செங்காட்டங்குடியிற் சந்தித்த காலம் ஏறத்தாழக் கி.பி. 650 ஆகலாம். அவரும் அப்பரும் அதன் பிறகு திருவாரூர், திருப்புகலூர், திருக்கடவூர் தரிசித்துத் திருவிழிமிழலை அடைந்தனர். அவர்கள் அங்குத் தனித்தனி மடத்தில் தங்கி இருந்தனர். அப்பொழுது நாட்டிற் கொடிய பஞ்சம் தோன்றியது. சேமம் நல்குமே என்று சம்பந்தர் வேண்டுதலால் பஞ்சத்தின் கொடுமை நன்கு விளங்கும். கோவிலில் நாளும் அப்பர் ஒரு பொற் காசும் சம்பந்தர் ஒரு பொற் காசும் பெற்று அடியாரை உண்பித்தனர். அப்பர்க்குக் கிடைத்து வந்த காசு நாளும் வட்டமின்றியே செல்லுபடி ஆயிற்று. பிறகு சம்பந்தர் இறைவனைப்பாடி நற்காசு பெற, அது வாசியின்றிச் செல்லுபடி ஆயிற்று இந்நிகழ்ச்சி ஏறத்தாழக் கி.பி. 650 அல்லது 651 இல் நடந்திருக்கலாம். இப்பஞ்சம், சேக்கிழார் கூறினாற்போல மழையில்லாமையாலும் சிறப்பாகப் பல்லவர்-சாளுக்கியர் போராட்டங்களாலும் பல்லவப் பெருநாட்டில் உண்டானது. போர்க்காலத்தில் பொன், வெள்ளி நாணயங்கள் தூய்மை குறைந்து அச்சடிக்கப்படல் அனைவரும் அறிந்ததே. அதே நிலைமை பல்லவர் ஆட்சியிலும் உண்டானது. பல்லவர் கல்வெட்டுக்களிற் பழங்காசு', 'காணம்', 'துளைப்பொன்', 'விடேல் விடுகு பொன்' என்று பெயர்கள் காண்கின்றன. பழங்காசு மாற்றுக் குறையாதது." இதனாற் போலும் 'பழங்காசினோடு உறைப்பத் துளைப்பொன் என்ற தொடர் கல்வெட்டுக்களில் எழுந்தது. இதன் பொருள் பழங்காசைப் போலவே மாற்றுக் குறையாதது என்பது போலும் துளைப்பொன்' என்பது அரசாங்கத்தாற் சோதனை பெற்ற தூய பொன் என்பதற்கு அடையாளமாகத் துளையிடப்பட்ட காசாகும். அதன் மீது "விடேல் விடுகு" முத்திரை இடப்பெற்றிருக்கும்." இவ்விவரங்களை நோக்க, அப்பர்க்குக் கிடைத்த காசு பழங்காசு என்பதும் சம்பந்தர்க்கு முதலிற் கிடைத்தது. அவர் தம் பாவிற் கூறுமாப் போலக் கறைகொள் காசு வட்டம் தரத்தக்க காசு என்பதும் விளங்கும். இங்ங்ணம் அப்பரும் சம்பந்தரும் காசு பெற்றது கோவில் பண்டாரத்திலிருந்து என்பதை உய்த்துணர்க." இக்காலச் சோழ அரசன் 1. அப்பர் பழையாறை சென்றபோது லிங்கத்தைச் சமணர் மறைத்தனர்.