உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பெரிய புராண ஆராய்ச்சி.pdf/159

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நாயன்மார் பற்றிய செய்திகள் 181 அறிஞர் கருத்து. சிவபிரான் அவன் கனவிற் சென்று கூறியதாகச் சேச்கிழார் குறித்ததே. அவன் அசரீரி கேட்டான்' என்ற கல்வெட்டுக் குறிப்பாகலாம். 'அவன் இக்கலியுகத்தில் அசரீரி கேட்டது வியப்பே என்று கயிலாசநாதர் கோவிற் கல்வெட்டுப் பாராட்டுகிறது. அவன் சிறந்த சிவபக்தன் - ஆகமப் பிரியன் என்பன முன்பே கூறப்பட்டவை. 2. பூசலார் கோவில் கட்ட விரும்பிப் பொருள்தேட முயன்றும் கிடைக்கவில்லை என்பது சேக்கிழார் கூற்று. இதற்கு இராசசிம்மன் காலத்தில் உண்டான கொடிய பஞ்சமே காரணமாகும். அப்பஞ்சத்தின் கொடுமையை அவனது அவைப் புலவராய தண்டி தாம் வரைந்துள்ள அவந்தி சுந்தர் கதையில் விளக்கியுள்ளார் . தமிழ்நாடு வற்கடத்தால் வாடியது. குடும்பப் பெண்கள் கொடுமையாக நடத்தப்பட்டார்கள் வேள்விகள் குன்றின; களஞ்சியங்கள் காலியாயின. வீடுகட்குரியவர் வெளியே விரட்டப்பட்டனர். நாநயம் கெட்டது. தோட்டங்கள், யாக மேடைகள் முதலியன அழிக்கப்பட்டன. பணக்காரர் கொல்லப்பட்டனர். சாலைகள் பழுதுபட்டன. உற்றார் உறவினர் இன்றியும் நண்பரால் துறக்கப்பட்டும் தண்டி நாடு முழுவதும் அலைய நேரிட்டது. - இக்கொடிய - வருந்தத்தக்கபஞ்சம் முன்சொன்ன பல்லவ-சாளுக்கியப் போர்களின் எதிரொலியாகும் என்னலாம்." இப் பஞ்ச காலம் சுமார் மூன்றாண்டுகள் இருந்ததென்றும், கிபி 689 இல் காஞ்சியை அடைந்த வஜ்ரபோதி என்ற பெளத்த துறவியாரை நரசிம்ம போதவர்மன் வேண்ட, அவர் பிரார்த்தனை மூலம் மழை பெய்யச் செய்தார் என்று சீன நூல் ஒன்று கூறுகிறது. இதனால், பஞ்சத்தின் காலம் கி.பி. 686-689 என்பது புலனாம்." - திருநின்றஆர் இது சென்னையிலிருந்து அரக்கோணம் செல்லும் இருப்புப் பாதையில் 'திண்ணனூர் என்ற பெயருடன் இருப்பது திருநின்றவூர் என்ற இப்ப்ெயர் 'திண்ணனூர்' என மருவியது. இது மிகப் பழைய பதியாகும். இங்குள்ள பெருமாள் கோவில் திருமங்கை மன்னனால் பாடப் பெற்றது" எனின், இப்பதி கி.பி. 8 ஆம் நூற்றாண்டில் நன்னிலையில் இருந்ததென்பது புலனாகும். இங்குள்ள சிவன் கோவில்" முன்னுள்ள கற்கம்பத்தில் தந்திவர்மன் (கி.பி. 790-840, 9 ஆம் ஆட்சி ஆண்டுக் கி.பி. 789 கல்வெட்டுள்ளது. அக் காலத்திலேயே அவ்வூர் ஒரு சபையால் ஆளப்பட்டு வந்தது. அங்குள்ள சிவன் கோவில் இராசசிங்கன் காலத்தது என்னும்படி அவனுடைய சிங்கத் தூண்களைப் பெற்றுள்ளது. கோவில் மூலத்தானத்தில் லிங்கத்திற்கு எதிரே பூசலார் சிலை வைக்கப்பட்டு நாளும் பூசை நடந்து வருகிறது. கோவில் மண்டபத்தில் இராசசிங்கன் உருவச் சிலை உள்ளது. கோவில் பெயர்