உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பெரிய புராண ஆராய்ச்சி.pdf/160

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

162 பெரியபுராண ஆராய்ச்சி "மனக்கோவில் கொண்டார் கோவில்" ஹிருதயாலேசுவரர் கோவில் என்பது. இந் நின்றவூர் மிகவும் பழமை வாய்ந்ததென்பது அவ்வூரின் உள்ளும் வெளியும் சிதறிக் கிடக்கும் சிவலிங்கங்களைக் கொண்டும் கூறலாம்." கச்சிக் கற்றளி' (கயிலாசநாதர் கோவில்) இதுபற்றிச் சேழக்கிழார். காடவர் கோமான் கச்சிக் கற்றளி எடுத்து முற்ற மாடெலாம் சிவனுக்காகப் பெருஞ்செல்வம் வகுத்தல் செய்வான்' என்றார். இஃது உண்மை என்பதை உணர்த்தும் கல்வெட்டுப் பட்டயச் சான்றுகளாவன: 1. இக்கோவில் இராசசிம்மனது புகழையும் சிவனது முறுவலையும் ஒத்துள்ளது. இது கயிலாயத்தை அழகில் வென்றது - கயிலாசநாதர் கோவில் கல்வெட்டு." - . . 2. விக்கிரமாதித்த சத்யாஸ்ரயன் (2-ஆம் விக்கிரமாதித்தன்) காஞ்சியைக் கைப்பற்றிய பிறகு. இராஜசிம்மேசுவரத்தின் செல்வத்தைப் பார்வையிட்டு மகிழ்ந்தான் அதனை அக் கடவுளுக்கே அளித்துவிட்டான் -கயிலாசநாதர் கோவிலில் உள்ள இரண்டாம் விக்கிரமாதித்தனது கன்னடக் கல்வெட்டு." 3. காஞ்சியைக் கைப்பற்றிய இரண்டாம் விக்கிரமாதித்தன் இராஜசிம்மேசுவரத்துப் பெருஞ்செல்வத்தைக் கண்டு வியந்து, அதனை அக்கோவிலுக்கே தந்து மகிழ்ந்தான் என்று இரண்டாம் விக்கிரமாதித்தனது கேந்தூர்ப்பட்டயம் செப்புகிறது." - 4. காஞ்சியைக் கைப்பற்றிய இரண்டாம் விக்கிரமாதித்தன் இராஜ சிம்மேசுவரத்தில் உள்ள பெருஞ் செல்வத்தைக் கைக் கொள்ளாது. அங்குள்ள விக்கிரகங்களைப் பொன் மயமாக்கி மீண்டான். - இரண்டாம் கீர்த்திவர்மனது வக்கலேரிப் பட்டயம்." . . இங்ங்னம் பல்லவர்க்குப் பகையரசரான சாளுக்கியர் விடுத்த கல்வெட்டுக்களாலும் பட்டயங்களாலும் கயிலாசநாதர் கோவிலுக்கு இராசசிங்கன் செய்த சிறப்பை அறியலாம். இத்தகைய சிறப்புடைய கோவில் இராசராசன் காலத்திலும் நன்னிலையில் இருந்தது." - - முதல் இராசேந்திரன் காலத்தில் கயிலாசநாதர் கோவில் திரு அணுக்கன் வாயிலுக்குக் கிழக்கே சுற்றுக் கல்லூரி இருந்தது. அக்கோயில் கணக்குகளை மேற்பார்வையிடச் சென்ற அரசியல் அதிகாரி அக் கல்லூரியில் தங்கி இருந்தான்' என்று கயிலாசநாதர் கோயில் கல்வெட்டுக் குறிக்கிறது. அக்கோயில் சோழர் காலத்தில் "பெரிய கற்றளி' எனப் பெயர் பெற்றது"