உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பெரிய புராண ஆராய்ச்சி.pdf/161

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நாயன்மார் பற்றிய செய்திகள் - 183 ஆயின், "முதற் குலோத்துங்க சோழன் காலத்தில் எக் காரணம் கொண்டோ கயிலாசநாதர் கோயில் மூடப்பட்டது. அதற்குரிய நிலங்கள் விற்கப்பட்டன. கோயில் திருவிருப்பு வெளிப் பிரகாரம்), திருமடைவிளாகம் (environs of the temple) முதலியன அணையபதங்காவுடையார் கோவிலுக்குத் தரப்பட்டன. இங்ங்ணம் சிறுமையற்று மூடப்பட்ட கோவில் சக ஆண்டு 1286 ஆடி முதல் திறக்கப்பட்டு விழா நடப்பதாக இதற்கு முருங்கையூர் சர்வமானியமாகட்டும்" என்ற கம்பண வுடையார் கல்வெட்டுக் காண்த் தக்கது. இக் கல்வெட்டால், முதற் குலோத்துங்கன் காலத்தில் (கி.பி. 1070-120 மூடப்பட்ட கோயில் கம்பனவுடையார் காலத்திற்றான் (கி.பி. 1364) திறக்கப்பட்டதென்பது அறியக் கிடக்கிறது. எனவே, நம் சேக்கிழார் காலத்தில் (கி.பி.1153-1150 இப் புகழ்பெற்ற கோவில் வெளிப்பிரகாரம், திருமடைவிளாகம் முதலிய இன்றிப் பொலிவிழந்து பூட்டப்பட்டுக் கிடந்ததென்பது தெளிவாகத் தெரிகிறது. ஆயின் கோவிலைச் சுற்றி 4 வீதிகள் இருந்தன. அவற்றில் சுந்தரப் பெருமாள் மடம் முதலிய சில மடங்கள் இருந்தன." இரண்டாம் குலோத்துங்கன் காலத்தவராய சேக்கிழார் இக் கயிலாசநாதர் கோவிலை நேரே கண்டிருத்தல் கூடியதே. அவர் காலம் கல்வெட்டுக் காலமாதலாலும், முதல் அமைச்சரான அவர்க்குக் கல்வெட்டோ-பட்டயமோ படித்தல் எளிதாதலாலும், கயிலாசநாதர் கோவிற் கல்வெட்டுகள்ைப் படித்து வியந்திருக்கலாம். அங்கு இருந்த சான்றோர் வாயிலாக அதன் பழைய வரலாறும் கேட்டறிந்திருக்கலாம். - மெய்ப்பொருள் நாயனார் (மிலாடுடையார்) நாம் அறிந்தவரை இவரது வரலாற்றைச் சேக்கிழார் பாடத் துணை புரிந்தவை (1) பொய்த்தவ வேடத்தவன் பகைமையாற் குத்த குத்துண்டவர் தத்தா இவர் நம்மவர் சிவனடியார் எனக் காவலனிடம் கூறி இறந்தவர் என்ற நம்பி கூற்றும் 2 தஞ்சைப் பெரிய கோவிலில் இருந்த தத்தா நமரே காண்' என்ற மிலாடுடையார் படிமம் ஒன்றும் ஆகும். சேக்கிழார் புதியனவாகச் சேர்த்தவை-1) முத்தநாதன் என்ற அரசனுக்கும் நாயனார்க்கும் இருந்த பகைமை - அவன் போரில் தோற்றமை (2) அதனால் அவன் சிவவேடமிட்டு எளிதாக அரசர் அறைக்குள் வந்தமை 3 ஆகமம் உபதேசிப்பதாகக் கூறி அதை எடுப்பான் போல உடைவாளை எடுத்து அவரைக் குத்தினமை என்பன. திருக்கோவலூரைத் தலைநகராகக் கொண்டு ஆண்டவர் சித்தவடவர். 'மலாடர்', 'மிலாடர் என்றும் சேதிராயர்','மலையமான்கள்' என்றும் கல்வெட்டுக்களிற் குறிக்கப்பட்டனர். இம்மரபினர்க்கு இயைந்த சித்தவடம்' கோவில். அப்பர் தேவாரத்தில் வைப்புத் தலமாகக் குறிக்கப்பட்டுள்ளது." (1) இரண்டாம் நந்திவர்மனது ஐந்தாம் ஆட்சி யாண்டில் சுமார் 730 இல்) வாணகோவரையர் சித்தவடவனார் மகளார் மாதேவடிகள் மணலூர்ப் பேட்டைச் சிவன் கோவிலுக்கு ஒரு சிற்றுரைத் தேவ தானமாக விட்டவர்"