உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பெரிய புராண ஆராய்ச்சி.pdf/162

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

164 பெரியபுராண ஆராய்ச்சி (2 கி.பி. ஒன்பதாம் நூற்றாண்டில் "இராசகேசரி" என்ற சோழனது முன்றாம் ஆண்டு திரு ஆமாத்துர்க் கல்வெட்டில் இராமன் சித்தவடவன் என்ற மிலாடுடையார் பெயர் காண்கிறது" (3) கண்டராதித்தர் காலத்தவரான (கி.பி. 949-957 சித்தவடவன் திருக்கோவலூர்க்கு 12கல் தொலைவில் உள்ள வீரசோழபுரம் என்ற இடத்தில் பகைவருடன் போரிட்டு, அவர் தம் அஞ்சத்தக்க எருதுகளைக் கைப்பற்றிப் பெருங்கடல் போன்ற பகை வீரரையும் வென்றான். அவன் தன்னை "ஓரி' மரபினன் என்று குறித்துள்ளான்.” (4) கன்னரதேவன் காலத்தில் நரசிம்மவர்ம்ன் என்ற சத்திநாதன் என்ற மிலாடுடையான் ஒருவன் இருந்தான்." (5) 'பரகேசரி சோழனது காலத்தில் மிலாடுடையார் சித்தவடத்தடிகள் என்பவர் மனைவி சேதி மகாதேவியார் என்பவள் திருச் சோற்றுத்துறைக் கோவிலுக்குத் தானம் செய்தனள் 6 இராசேந்திர சோழன் காலத்தில் உத்தமசோழ மிலாடுடையார் என்ற ஒருவர் வாழ்ந்தார்" (7) மிலாடுடையார் ஒருவர் மகளை உத்தம சோழன் மணந்து கொண்டான்." நமது நான்காம் பிரிவில் காட்டப்பெற்ற நாயன்மார்காலக் கணக்கின்படி மெய்ப்பொருள் நாயனார் கி.பி. 660-840 க்குள் வாழ்ந்தவராவர். மேற்சொன்ன அரசருள் மேற்சொன்ன காலத்துள் வரத்தக்கவர் வாணகோவரையர் சித்தவடன்ார் என்பவர் ஆவர். அவர் மகளார்"மாதேவடிகள்" என்ற சிறப்புப் பெயர் தாங்கி இருப்பதும், அம்மகளார் ஒரு சிற்றுரையே தேவதானமாக விட்ட பக்தியின் மேம்பாடும் நோக்க, அச்சிவநெறிச் செல்வியார்தம் தந்தையாரே நமது மெய்ப்பொருள் நாயனாராக இருக்கலாம் என்று கருத இடமுண்டு, எனினும், இஃது உறுதியன்று. மேற்கூறிய மிலாடுடையார் மரபினராய ஆடவர்-பெண்டிர் சிவபக்தியும் சிவப்பணியும் மேற்சொன்ன கல்வெட்டுக்களால் நன்கறியலாம். முன் சொன்ன வீர சோழபுரத்துப் போரை நோக்க, அதைப் போல நமது நாயனாரும் போட்டிருக்கலாம் எனக் கோடல் தவறாகாது. இம்மிலாடுடையார் முதற் குலோத்துங்கன் கால முதல் சேதிராயர்' என்ற பட்டத்துடன் கல்வெட்டுக்களிற் குறிக்கப்பட்டுளர். நமது சேக்கிழார் காலத்தில் மலைநாட்டை ஆண்டவர் விக்கிரமசோழச் சேதிராயர், அவன் மகன் விக்கிரமசோழக் கோவலராயர், கிளியூர் மலையமான் குலோத்துங்க சோழச் சேதிராயர் என்பவர். இவர் அனைவரும் சோழப் பேரரசனான இரண்டாம் குலோத்துங்கற்கு அடங்கிய சிற்றரசர் ஆவர். - கழற்சிங்கர் - - இவரைப் பற்றிச் சேக்கிழார் கூறும் வரலாற்றுக் குறிப்புக்கள் சுந்தரரோ நம்பியோ குறிக்காதவை. அவை இன்ன என்பதும் அவற்றுக்கும் கல்வெட்டு பட்டயச் செய்திகட்கும் உள்ள ஒருமைப்பாடும் முன்றாம் பிரிவில் தெளிவாகக் கூறப்பட்டுவிட்டன. அங்கு விளக்கமாகக் குறியாத ஒன்று மட்டும் இங்குக் குறிப்போம். - -