உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பெரிய புராண ஆராய்ச்சி.pdf/163

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நாயன்மார் பற்றிய செய்திகள் f{35 'கழற்சிங்கர் பட்டத்தரசி உரைசிறந்து உயர்ந்தவள் சாயல் மாமயிலே போல்வாள் மதுமலர்த் திரு ஒப்பாள் காதல் மாதேவி என்பன சேக்கிழார் தரும் குறிப்புகள்" . இவற்றை விளக்க வந்தது போல் உள்ள பாகூர்ப் பட்டயக் கூற்றுக் காண்க - "திருமாலுக்கு அமைந்த இலக்குமிபோல. இராட்டிரகூடர் குடும்பத்தில் பிறந்த சங்கா என்ற மெல்லியலாள் நந்திவர்மர்க்கு மனைவியாக வாய்த்தாள். அவள் பொறுமையில் நிலமகளை ஒத்தவள் தம் தாய் எனக் குடிகளால் பாராட்டப் பெற்றவள் அரசனது நற்பேறே உருவெடுத்தாற் போல விளங்கினவள். அவள் பேரழகி மதிநுட்பம் வாய்ந்தவள் பல கலைகளிலும் வல்லவள். அவள் பெற்ற மகனே நந்திவர்மற்குப் பின் பட்டம் பெற்றி நிருபதுங்கவர்மன்." இக்கழற்சிங்கர் பட்டத்தரசி உரை சிறந்து உயர்ந்தவள்’ என்பதைச் சேக்கிழார் எங்ங்னம் அறிந்தனர் என்பதே வியப்புக்குரியது. இக்குறிப்பு நந்திக் கலம்பகத்திலும் இல்லை. அவர் பாகூர்ப் பட்டயத்தைப் பார்த்திருப்பாரோ? கோட்புலி நாயனார் (1) இவர் சுந்தரர் காலத்தவர் (கி.பி. 840-865 நாட்டியத்தான்குடிப் பதியினர்; சோழர் சேனைத்தலைவர் (2) இவர் அரசர் ஏவலால் பகைவர்மீது சென்றார். (3) இவர் டோனபிறகு வற்கடம் தோன்றிச் சோணாட்டை வருத்தியது (4) மன்னன் பகைப்புலத்தில் தம் கடமையைச் செய்து வெற்றி பெற்றார் எனத் திட்டமாகக் கூறாமை நோக்கத்தக்கது அரசன்பால் பரிசுபெற்று மீண்டார். இவையே இவர் புராணத்துள் சேக்கிழார் கூறும் வரலாற்றுக் குறிப்புக்கள்." இவற்றுக்குத் தென் இந்திய வரலாற்றுச் செய்தி எந்த அளவு இடந்தருகிறது என்பது காண்போம்: . . 1. கழற்சிங்கன் காலத்து இரட்ட அரசன் கிபி 814-880) அமோக வர்ஷ நிருபதுங்கன் . முன்றாம் நந்திவர்மன் அமோக வர்ஷன் மீது படையெடுத்துச் சென்று வென்ற செய்தி முன்றாம் பிரிவிற் கூறப்பட்டதன்றோ? அங்ங்னம் அவன் வடக்கே வெற்றிபெற்றுத் திரும்புவதற்குள் தமிழரசர் பல்லவ் நாட்டின்மீது படையெடுத்துத் தெள்ளாறுவரை சென்றுவிட்டனர். வடக்கே வாகைசூடி மீண்ட நந்திவர்மன் சேர, சோழ, பாண்டியரைத் தெள்ளாற்றுப் போரில் முறியடித்தான். பிறகு அவர்களைத் துரத்திச் சென்று கடம்பூர், வெறியலூர், வெள்ளாறு பழையாறு என்ற இடங்களில் தோற்கடித்தான்" 2. இங்ங்னம் பல்லவருக்கும் தமிழரசர்க்கும் நடந்த பல இடத்துப் போர்கள் ஒன்றில் நமது கோட்புலியார் சோழர் படைக்குத் தலைமை தாங்கிப் போயிருக்கலாம். அவரது படை இரண்டோர் இடங்களில் வெற்றி