உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பெரிய புராண ஆராய்ச்சி.pdf/164

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

1 GB பெரியபுராண ஆராய்ச்சி பெற்றிருக்கலாம். எனினும், தமிழரசர் தோல்வியேயுற்றனர். ஆயினும், கோட்புலியார் அரசன் ஆணைப்படி தம் கடமை நிறைவேற்றியதால் அரசனால் சிறப்புச் செய்யப் பெற்றார்' என்ற சேக்கிழார் வாக்குப் பொருத்தமாகலாம். தோல்வி ஏற்படினும், போரில் தம் வீரத்தைக் காட்டியோர் சிறப்புப் பெறுதல் இற்றைநாள் வழக்கமுமாகும் அன்றோ? சுந்தரர் காலத்தில் பாண்டியனாக இருந்தவன் (கி.பி. 830-862 பூரீ மாறன் பூரீ வல்லபன். அவன் காலத்திற்றான் சுந்தரர் சேரமானுடன் மதுரை சென்றார். அப்பொழுது பாண்டியனுக்கு மருமகனான சோழ அரசனும் அங்கு இருந்தான் என்று சேக்கிழார் தெளிவாகக் கூறல் கவனிக்கத்தக்கது." இவ்வளவு தெளிவாகச் சேக்கிழார் கூறினர் எனின், அவர் தம் சோழ அரச மரபினரைக் கேட்டே இதனைக் குறித்தனர் எனக் கோடல்வேண்டும். இது நம்பத்தக்க செய்தியாயின், சோழ அரசன் தன் படைத் தலைவராய கோட்புலியாரைப் பாண்டியன் செய்த பல போர்களிலும் ஈடுபடுத்தியிருக்கலாம் எனக் கோடல் தவறாகாது. பூரீ மாறன் ஏறத்தாழக் கிபி 854 இல் குடமுக்கில் நடந்த பல்லவர் பாண்டியர் போரில் வெற்றி பெற்றான்." அப்போரில் பாண்டியனுக்கு உதவியாக அவன் மருமகனான சோழன் கோட்புலியாரைச் சோழப் படையுடன் அனுப்பியிருக்கலாம். அப்போரிலோ பிற போரிலோ கோட்புலி வெற்றி பெற்றதைச் சுந்தரர், "கூடா மன்னரைக் கூட்டத்து வென்ற கொடிறன் கோட்புலி" எனப் பாராட்டியிருக்கலாம். பஞ்சம் இனிக் கோட்புலியார் போருக்குச் சென்றிருந்தபோது பஞ்சம் உண்டானது. சிவடியார்க்கென வைக்கப்பெற்றிருந்த நெல்லை அவர் உறவினர் உண்ண வேண்டிய தேவை ஏற்பட்ட கொடிய பஞ்சம் உண்டானது: இப்பஞ்சத்தின் கொடுமை திருவாரூரிலும் உணரப்பட்டது என்பது சேக்கிழார் கூற்று" நந்திவர்மன் ஆட்சியில் நாட்டில் வறுமை உண்டானது. அவன் அதனை நீக்கினான் என்று நந்திக் கலம்பகம் கூறுகிறது. இரண்டாம் நந்திவர்மன் காலத்தில் உண்டான சாளுக்கியர் - பல்லவர் டோரும், பல்லவர் - தமிழரசர் போரும், நந்திவர்மன் காலத்தில் உண்டான இரட்டர்-பல்லவர் போர்களும், இந் நந்திவர்மன் காலத்தில் உண்டான (1) இரட்டர்-பல்லவர் போர் (2) பல்லவர்-தமிழரசர் (தெள்ளாற்றுப் போர் (3) பல்லவர் - தமிழரசர் குடமுக்குப் போர் முதலியவற்றால் பல்லவ நாடு பஞ்சத்தால் தத்தளித்திருத்தல் இயல்பே. பல்லவர் நாட்டிற்கும் பாண்டிய நாட்டிற்கும் இடைப்பட்ட சோழர் இப்போர்களில் பங்கு கொள்ள வேண்டிய வற்புறுத்தலுக்காளாயினர். ஆதலின் சோழ நாடும் பஞ்சத்திற்குட்பட்டது. உலகப்போர் நடந்த காலத்தில் நாம் பஞ்சத்தை அனுபவித்தமை போலக் கோட்புலியார் உறவினர் பஞ்சத்தை அனுபவித்ததில் வியப்பில்லை அன்றோ? .