உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பெரிய புராண ஆராய்ச்சி.pdf/165

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நாயன்மார் பற்றிய செய்திகள் 167 தென் இந்திய வரலாற்றோடு ஏறத்தாழ ஒன்றுபடும் இப்பழைய செய்திகளை எல்லாம் வல்லார்வாய்க் கேட்டும் தக்க சான்றுகள் கொண்டும் வெளிப்படுத்திய சேக்கிழார் திறமே இங்கு வியக்கற்பாலது நரசிங்க முனையரையர் : ( இம்மரபினரைப் பற்றிய கல்வெட்டுக்கள் சிலவாகும். அவற்றுட் பழமையானது முன்றாம் நந்திவர்மன் மகனான நிருபதுங்கனது (கி.பி. 865-900, 16 ஆம் ஆட்சி ஆண்டுக் (கி.பி. 880) கல்வெட்டாகும். அத்திருவதிகைக் கல்வெட்டில் 'முனைப்பேரரையர் மகன் முனையர்கோன் இளவரையன்' என்பது காண்கிறது. நிருபதுங்கன் தந்தையரான கழற்சிங்கரும் சுந்தரரும் அவரை வளர்த்த நரசிங்கமுனையரையரும் ஏறத்தாழ ஒரு காலத்தவர் (கி.பி. 840-865) என்பது சேக்கிழார் கூற்று. ஆதலின், மேற்சொன்ன கல்வெட்டில் குறிக்கப்பட்டுள்ள முனைப்பேரரையர் நமது நரசிங்க முனையரையர் ஆகலாம் எனக் கோடல் தவறாகாது. முனையர்கோன் இளவரையன்' அவர் மகனாகலாம். இங்ங்ணம் கொள்ளற்குக் காலம் (16 ஆண்டுகள் இடந்தருதல் காண்க (2) அபராசிதன் ஆட்சியில் முனையதரையன் அபராசிதன் குலமாணிக்கப் பெருமானார் என்று ஒருவன் இருந்தான் என்று திருநாவலூர்க் கல்வெட்டுக் குறிக்கிறது.’ இவ்வரச மரபினர் தொடர்ந்து சோழராட்சியிலும் இருந்து வந்தனர். (3) வீரராசேந்திரன் ஆட்சியில் 'வீரராசேந்திர முனையதரையன்' என்பவன் இருந்தான் (4) விக்கிரமசோழன் (கி.பி.1118-1135) இடம் அமைச்சனாகவும் தானைத் தலைவனாகவும் ஒரு முனையதரையன் இருந்தான்." . எனவே, சேக்கிழார் நரசிங்க முனையரையரைப் பற்றித் தமது தலயாத்திரையின்போது திருநாவலூரில் கேட்டதையன்றி, இம் முனையரையனையோ இவன் மகனையோ கேட்டுப் பல செய்திகளைப் பொதுவாகவும் நரசிங்கர் சுந்தரரைத் தம் மகனான ஏற்று வளர்த்தனரா என்ற நுட்பமான செய்தியைச் சிறப்பாகவும் கேட்டறிந்தனர் எனக் கோடல் பொருத்தமே ஆகும். திருவாரூர்க் கல்வெட்டு : இது சேக்கிழார் காலத்தது. அதனில், சுந்தரர் தாயாரான இசைஞானியார் திருவாரூரில் பிறந்தவர்; அவர் திருவாரூர்-ஞானசிவாசாரியர் மகளார். இசைஞானியார், சடையனார், சுந்தரர் இம்முவர் படிமங்களையும் இரண்டாம் குலோத்துங்கன் ஆரூர்க் கோவிலில் அமைத்தான்' என்பது காணப்படுகிறது. இவ்வெட்டுச் செய்தியால், சேக்கிழார் காலத்தில் சுந்தரர் வரலாறு அறிந்த சிவாசாரிய மரபினர் அல்லது இசைஞானியார் மரபினர் திருவாரூரில் இருந்தனர் எனக் கொள்ளலாம். கொள்ளின், சேக்கிழார், அவர்கள் வாயிலாகச் (1) சுந்தரர் முனையரையரால் வளர்க்கப்பட்டமை (2) சுந்தரர்-பரவையர் திருமணம் (3) திருத்தொண்டத் தொகை பாடிய சந்தர்ப்பம் (4)பரவையார் ஊடல்தீர்க்க இறைவன் முயன்றமை