உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பெரிய புராண ஆராய்ச்சி.pdf/166

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

168 பெரியபுராண ஆராய்ச்சி போன்ற-வேறு நூல்களிலிருத்து அறியப்படாத பல குறிப்புக்களைக் கேட்டறிந்தனர் என்பதை நம்பலாம். х (1) சிற்றரச மரபினரான நரசிங்க முனையரையர் ஆதிசைவராகிய சுந்தரரை வளர்த்தனர் என்பதை நமக்கு முதன் முதல் அறிவிப்பவர் சேக்கிழார்தாம்’ (2) அவர் அத்துடன் நில்லாது. சுந்தரர் திருமணத்திற்கு ஒலை போக்கினபோதும் கொற்றவர் திருவுக்கேற்பக் குறித்துநாள் ஒலை விட்டார்." என்று கூறினார் (3) பரவையாரை மணந்த பிறகு சுந்தரர் அரசகுமாரனைப்போல ஊர்வலச் சிறப்புடன் கோவிலை அடைந்தார்" என்று கூறியுள்ளார். பல இடங்களில் நாவலூர் மன்னர் என்று புகன்றுள்ளார். இங்ஙனம் பல இடங்களிலும் சுந்தரர் அரசர் செல்வாக்குப் பெற்றவர் என்று சேக்கிழார் தெளிவாகக் கூறற்கு அவர் முனையரையர் மரபினரிடமும் சுந்தரர் மரபினரிடமும் கேட்டறிந்த செய்திகளே தக்க சான்றாக இருத்தல் வேண்டும். நரசிங்கரும் திரு ஆதிரை விழாவும் நரசிங்க முனையரையர் கழற்சிங்கனான முன்றாம் நந்திவர்மன் காலத்தவர் அல்லவா? அவர் திருவாதிரை விழாவில் அடியாரை உபசரித்து ஒவ்வொருவர்க்கும் 100 பொன்னுக்குக் குறையாமல் கொடுத்து உண்பித்தவர் என்பது சேக்கிழார் வாக்கு" இங்ங்னம் அவர் காலத்தில் திருவாதிரை விழாச் சிறப்பாகக் கொண்டாடப்பட்டது. அடியார்க்கு உபசாரம் செய்யப்பட்டது என்பதைக் கல்வெட்டால் அறியலாம். 'வழுவூரான் என்பவன், குன்றாண்டார் கோவிலில் (புதுக்கோட்டைச் சீமை நடைபெற்ற திருவாதிரை விழாவில் 100 பேர்க்கு உணவளிக்க அரிசிதானம் செய்தான்' என்று நந்திவர்மனது மூன்றாம் ஆட்சி ஆண்டுக் (சுமார் கி.பி. 842 கல்வெட்டுக் கூறுகிறது. மதுச்சோழன் சேக்கிழார் நகரச் சிறப்பைக் கூறுகையில் திருவாரூர் நகரைத் தலைநகராகக் கொண்டு சோழ நாட்டை ஆண்ட மதுச்சோழன் செங்கோன்மையை அவன் வரலாற்றால் விளக்கியுள்ளார். இச்சோழன், தன் ஒரே மகன் ஊர்ந்த தேர்க்காலில் அகப்பட்டு இறந்த கன்றுக்காக அம்மகனை அத்தேர்க்காலில் இட்டுக் கொன்றான் என்பது இவனது வரலாற்றுச் சுருக்கம். இதனை முதல் முதல் நமக்கு அறிவிக்கும் நூல் சிலப்பதிகாரம். அது தேவாரத் திருமுறைகளிற் கூறப்படவில்லை; பிற்காலச் சோழர் காலத்துச் செய்யப்பட்ட கலிங்கத்துப் பரணி, உலா இவற்றில் கூறப்பட்டுள்ளது. அங்கும் மதுச்சோழன் முழு வரலாறு கூறப்படவில்லை. ஆயின், சேக்கிழார் ஒருவரே முழு வரலாறு கூறியுள்ளார். இவ்வரலாறு இவர்க்கு எங்ங்னம் கிடைத்தது? திருவாரூர்க் கல்வெட்டு : திருவாரூர் வீதிவிடங்கப் பெருமான் கோவில் இரண்டாம் பிரகாரம் வடபுறச் சுவரில் ஒரு பெரிய கல்வெட்டுக் காண்கிறது. அது விக்கிரம சோழனது ஐந்தாம் ஆட்சியாண்டில் (கி.பி. 123-இல்