உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பெரிய புராண ஆராய்ச்சி.pdf/168

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

170 பெரியபுராண ஆராய்ச்சி வரலாறு : சங்ககாலம் முதிலே மகாபலிபுரம் சிறந்த துறைமுகப் பட்டினமாக இருந்தது." பூம்புகார் கடற்றுறைப் பட்டினமாக இருந்தது என்பது பட்டினப் பாலையால் அறியலாம். புகாரும் நாகப்பட்டினமும் சம்பந்தர் காலத்தில் துறைமுகப்பட்டினங்களாக இருந்தன." . கி.பி. ஐந்தாம் நூற்றாண்டினரான புத்ததத்தர், காவிரிப் பூம்பட்டினத்திற் பெருஞ்செல்வராய வணிகர் தம் காலத்தில் உறைந்தனர் என்றும், பூம்புகார் துறைமுகமாகவும் அழகிய வளமிக்க மாநகரமாகவும் இருந்தது என்றும் கூறியுள்ளார்." கி.பி. 5, 6, 7 ஆம் நூற்றாண்டுகளில் வரையப்பட்ட சீனர் குறிப்புக்களில் தென் இந்திய வாணிகமும் இடம் பெற்றுள்ளது. அக்காலத்தில் மகாபலிபுரம், காவிரிப்பூம்பட்டினம், சாலியூர், கொற்கை என்பன கீழ்க்கரையில் சிறந்த துறைமுகப்பட்டினங்களாக இருந்தன. கிழக்குக் கடல் வாணிகத்தில் இலங்கையும் நிக்கோபார் தீவுகளும், மேலைக் கடல் வாணிகத்தில் லக்கத்தீவுகளும் மால்டிவ் தீவுகளும் கப்பல்கள் தங்கும் இடங்களாக இருந்தன." இராசசிங்கன் (கி.பி. 685-720 சீன வணிகர்க்காக நாகையில் பெளத்த விஹாரம் ஒன்றைக் கட்டிச் சீன அரசனைப் பெருமைப்படுத்தினான். சீன அரசனும் பல்லவனை மதித்துப் பல பரிசுகள் அனுப்பினான் என்று சீன நூல் கூறுகிறது. நந்திவர்மன் காலத்தில் கடல் வாணிகம் நன்னிலையில் நடந்த தென்பதற்குத் தகௌபாக் கல்வெட்டுத் தக்க சான்றாகும்." நானாதேசத்திசை ஆயிரத்து ஐஞ்னூற்றுவர் என்னும் கூட்டத்தார் சோழர் காலத்திற் சிறந்த வணிகராக இருந்தவராவர். இவர்கள் கடல் கடந்து பல நாடுகளில் வாணிகம் செய்தவர்கள். இவ்வணிகக் கூட்டம் விசயாலயச் சோழ மரபினர்க்கு முற்பட்டதாக இருக்கவேண்டும் என்று எண்ண இடமுண்டு.” 2. மறையவர் சிற்றுார்கள் பல்லவர் காலத்தில் மறையவர் பல சிற்றுர்களிற் குடியேறியிருந்தனர் என்பதும், அவர்கள் பலராக இருந்த சிற்றுர்கள் அவர்கள் ஆட்சியில் இருந்தன என்பதும் 6-ஆம் பகுதியிற் கூறப்பட்டன. அத்தகைய ஊர்களில் முன்று பெரிய புராணத்துள் கூறப்பட்டுள. அவை ( சேய்ஞ்ஞலூர் (2) தில்லை (3) திருவெண்ணெய் நல்லூர் என்பன. 1. சேய்ஞ்ஞலூர் (சேய் நல்லுர்) இவ்வூர்ச் சபையார் மறையவர். அவர்கள் தங்கள் பசுக்களின் பாலை விசார சர்மன் (சண்டீச நாயனார் வீணாக்குவதை அவர் தந்தைக்கு அறிவிக்க அவன் 'இனி அக்குற்றம் நடப்பின், அதற்கு நான் உள்ளவேன்' என அதற்கு அவர்கள் இசைந்தார்கள்."