உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பெரிய புராண ஆராய்ச்சி.pdf/169

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நாயன்மார் பற்றிய செய்திகள் 171 2. தில்லை தில்லையில் தில்லைவாழ் அந்தணர் அவை இருந்தது. அவர்கள் அவ்வூரார் வழக்குகளைத் தீர்த்துவந்தனர் போலும் திருநீலகண்ட நாயனார்க்கும் வேதியர்க்கும், ஒப்புவித்த பொருள் திருஒட்டினைக் காணாமற் போக்கிய வழக்கு (Breach of trust) நேர்ந்தபோது அதனை மேற் சொன்ன அவையாரே தீர்த்து வைத்தனர்." 3. திருவெண்ணெய்நல்லூர் இங்கு மறையவர் அவை இருந்தது. அவர்கள் சுந்தரரையும் அவரை அடிமை என்று வாதித்த சிவனாகிய கிழவேதியனையும் விசாரித்தனர். ஆட்சி ஆவணம், அயலார் காட்சி என்ற மூன்றையும் நன்கு சோதித்துக் கிழவேதியன் காட்டிய படி ஒலை, (copy) முல ஓலைகளைச் சோதித்தனர்; அம்மூல ஓலை GTQpg|b =9|J&T 5(55Tüülä (Record-room of the Village Sabha) @@## சுந்தரர் பாட்டனார் வரைந்திருந்த ஒலை எழுத்தும் ஒன்றாக இருத்தலைக் கண்டு. சுந்தரர் கிழவேதியர்க்கு அடியவரே எனத் தீர்ப்புக் கூறினர். அவர்தம் அவையில் 'கரணத்தான் (Clerk) இருந்தான்." வரலாறு இவ்வூர் அவைகள் பல்லவர் கல்வெட்டுக்களிலோ பட்டயங்களிலோ இடம் பெற்றில. ஆயினும், இவை இருந்தில எனக் கூறவும் சான்றில்லை, நாயன்மார் குறிப்புக்களைத் தக்கவாறு தொகுத்தனர் என்று நாம் நம்பும் சேக்கிழார், இச் செய்திகளைத் தம் மனம் போனவாறு கூறினார் எனக் கோடல் இயலாது. பல்லவப் பெருநாட்டில் ஏறத்தாழ 20 ஊர்களில் அவைகள் இருந்தன என்பது கல்வெட்டுக்களால் தெரிகிறது." திருநின்றவூரில் சபை இருந்ததை நோக்குழிப் புகழ்பெற்ற தில்லையில் சபை இருந்ததில்லை எனக் கூற இயலுமா? 'தன்மையினால் அடியேனைத் தாமாட்கொண்ட நாள் சபைமுன்’ "வெண்ணெய் நல்லூரில் அற்புதப்பழ ஆவணம் காட்டி ...” தம்மை இறைவன் ஆட்கொண்டதாகச் சுந்தரர் பல இடங்களிற் கூறியுளர்." இவ்வகச் சான்றுகளைக் கொண்டும் தாம் நேரிற் கேட்டறிந்தவற்றைக் கொண்டும் சேக்கிழார் பெருமான் சுந்தரர் வழக்கை மிகத் தெளிவாக விளக்கிச் சென்றனரே தவிர, தம் நீதிமன்ற விவரங்களை மனத்தில் எண்ணிக்கொண்டு, சுந்தரர் காலத்தில் இல்லாத ஒன்றைக் கூறினார் அல்லர். கிருஷ்ணை முதல் காவிரிவரை பரந்துபட்ட பெருநாட்டை ஆண்ட பல்லவர் ஆட்சியில் கிராமச் சபைகள் இல்ல்ை எனவோ, அச்சபை வேலைகளைக் கவனிக்கக் கரணத்தான் இல்லை எனவ்ோ, அவ்வூர்க்குரிய ஆவணங்கள் (Records) இல்லை எனவோ கூறல் இயலாது." அவற்றைத் தெளிவாக உணர்த்தத் தக்க