உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பெரிய புராண ஆராய்ச்சி.pdf/170

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

172 பெரியபுராண ஆராய்ச்சி கல்வெட்டுக்கள் இக்காலத்தில் இல்லாமையால், அவை இருந்தில எனக் கோடல் முறையன்று. சிறந்த நாகரிகக் கலைகளை வளர்த்துப் பல நூற்றாண்டுகள் பேரரசு நடத்திய பல்லவர் மேற்சொன்ன ஊராட்சி முறையைச் சிறந்த நிலையிற் கொண்டிருந்தனர் என்றெண்ணலே முறையாகும். ஆகவே, சேக்கிழார் கூற்று நாயன்மார் கால முறைக்கு மாறுபட்டதாகாமை அறியப்படும். 3. உடன் இறத்தல் (1) அப்பருடைய தாயார் தம் கணவருடன் உடன் கட்டை ஏறினார்" எனவும் (2 சேரமான் விண்வழிச் சென்றதைக் கண்ட அவர் மெய்க்காவல் படையினர் வாளால் குத்திக்கொண்டு இறந்தனர் (அவர் முன் சென்று கயிலையில் சேவகம் ஏற்றனர்)" என்றும் சேக்கிழார் குறித்துள்ளார். இவ்விரண்டு செய்திகள் சேக்கிழார் கூறவேண்டிய தேவை இல்லை. அங்ங்னம் இருந்தும் அவர் கூறியதை நோக்கத் தக்க சான்று கொண்டே கூறினார் எனக் கொண்டு, அப்பர்-சேரமான் காலங்களில் (பல்லவர் காலத்தில் இவ்வழக்குகள் உண்டா என்பதை ஆராய வேண்டும். வரலாறு 1. அப்பர் காலத்திற்கு முற்பட்ட நூலாகிய மணிமேகலையில் கணவனை இழந்த பத்தினிப் பெண்டிர் (1) உடனே உயிர்விடுவர் (2) தீ முழ்குவர் (3) கைம்மை நோன்பு நோற்பர் என்ற மூவகை வழிகள் குறிக்கப்பட்டுள. இவற்றில் முதல் வழியை அப்பர் தாயார் கைக்கொண்டார். மூன்றாம் வழியை அப்பர் தமக்கையார் கைக்கொண்டார். எனவே, இப்பழக்கங்கள் கி.பி. 7 ஆம் நூற்றாண்டில் இருந்தவை எனக் கொள்ளலாம். மனைவி உடன் இறக்கும் பழக்கம் கி.பி. 10, 11, 12 ஆம் நூற்றாண்டுகளிலும் இருந்தது என்பது சோழர் காலத்துக் கல்வெட்டுக்களாலும் அறியலாம்" சுந்தரசோழனுடன் இராசராசன் தாயான வானவன் மாதேவி உடன்கட்டை ஏறினாள்." 2. சேரமானுடன் சென்ற படைவீரர் அவர் விண்வழிச் சென்றதைக் கண்டதும், தம்மைத் தாமே வாளால் குத்திக்கொண்டு இறந்த செயல் கவனிக்கத் தக்கது. இவர்கள் இராசராசன் காலத்து வேளைக்காரப் படையினரை ஒத்தவர் ஆவர். இப்படையினர் அரச சேவையில் அரசனது நம்பிகைக்கு உரியவர்; அரசரை எப்பொழுதும் சூழ இருந்து பாதுகாத்தலும், அவன் இறப்பின் உடன் இறத்தலும் இவர் தொழிலாகும். இங்ங்ணம் அவனுக்காகத் தியாகம் செய்யும் வேளையை எதிர்பார்த்து நிற்றலின் இவர் வேளைக்காரர்' எனப்பட்டனர்." இம்முறையில் தென்னவன் ஆபத்துதவிகள் என்று பிற்காலப் பாண்டியரிடம் வீரர் இருந்தனர் என்பது மார்க்கோபோலோ குறிப்பாலும் அறியப்படும்." இச்சான்றுகளை நோக்கச் சேரமானிடம் இத்தகைய வேளைக்காரப் படையினர் இருந்தனர் என்று கோடல் பொருந்தும்