உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பெரிய புராண ஆராய்ச்சி.pdf/178

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

11. சேக்கிழாரது நூலாசிரியப் பண்பு பெரிய புராணம் பெருங்காவியம் நாயன்மார் வரலாறுகட்குரிய முலங்களை எல்லாம் இலக்கியம் - கர்ண பரம்பரை - கல்வெட்டு இவற்றைக் கொண்டு தொகுத்த சேக்கிழார், அவற்றைத் தம் தமிழ்ப் புலமைத் திறத்தினாலே ஒரு பெருங் காவியமாகச் செய்து அதற்குத் 'திருத்தொண்டர் புராணம் எனப் பெயரிட்டார் என்பது தெரிகிறது. சேக்கிழார், இந்நூலுள் சுந்தரர் வரலாற்றை நூலின் முதல்-இடை-கடைகளில் வைத்தும், சுந்தரரால் குறிக்கப் பெற்ற நாயன்மார் வரலாறுகளை இடையிடையே வைத்தும் சென்றதை நோக்க காவியத் தலைவர் சுந்தரர் என்பது தெளிவாகப் புலனாகும். சுந்தரரது திருத்தொண்டத் தொகை பிறந்ததும் பரவையார் காதல் மணம் நிகழ்ந்ததும் ஆகிய திருவாரூரே நகரமாகக் கொள்ளப்பட்டு நகரச் சிறப்பும், அந்நகரைத் தன் அகத்தே கொண்டதால் சோணாட்டுச் சிறப்பும் காவிய முறைக்கேற்ப ஆசிரியராற் கூறப்பட்டன. சேக்கிழார், திருத்தொண்டத் தொகைப் பாடல்கள் 11-ஐயும் 11 சருக்கங்களாகக் கொண்டார். அவை யாவன: சுந்தரர் தொகையில் உள்ள 11 பாக்களுடைய முதல்களின் பெயரிட்டுச் சேக்கிழார் வகுத்துக் கொண்ட 11 சருக்கங்கள் பாடலின் முதல் சருக்கத்தின் பெயர் 4. தில்லைவாழ் அந்தணர்தம் அடியார்க்கும் அடியேன் 'தில்லைவாழ் அந்தணர்' சருக்கம் 2. இலைமலிந்த வேல்நம்பி 'இலைமலிந்த சருக்கம் எறிபத்தர்க் கடியேன் . 3. மும்மையால் உலகாண்ட 'மும்மையால் உலகாண்ட மூர்த்திக்கும் அடியேன் சருக்கம் 4. திருநின்ற செம்மையே செம்மையாக் கொண்ட 'திருநின்ற சருக்கம் 5. வம்பறாவளிவண்டு 'வம்பறா வரிவண்டுச் மணநாற மலரும் சருக்கம் 6. வார்கொண்ட வனமுலையாள் 'வார்கொண்ட வளமுலையாள்' உமைபங்கன் கழலே சருக்கம்