உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பெரிய புராண ஆராய்ச்சி.pdf/179

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சேக்கிழாரது நூலாசிரியப் பண்பு 181 7. பொய்யடிமை இல்லாத 'பொய்யடிமை இல்லாத புலவர்' புலவர்க்கும் அடியேன் சருக்கம் 8. கறைக்கண்டன் கழலடியே 'கறைக்கண்டன் சருக்கம் காப்புக் கொண்டிருந்த 9. கடல்சூழ்ந்த வுலகெல்லாம் 'கடல் சூழ்ந்த சருக்கம் காக்கின்ற பெருமான் 10. பத்தராய்ப் பணிவார்கள் 'பத்தராய்ப் பணிவார்' எல்லார்க்கும் அடியேன் சருக்கம் 11. மன்னியசீர் மறைநாவன் 'மன்னியசீர்ச் சருக்கம் நின்றவூர்ப் பூசல் . ஒவ்வொரு சருக்க முடிவிலும் சுந்தரரைப் பற்றிப் பாடிச் செல்வது பெரிய புராணம் ஒரு தொடர் நிலைச் செய்யுள்' என்பதை வற்புறுத்தற்கே என்பது தெளிவாகும். சுந்தரர் கதை திருமலை (கயிலாயச் சருக்கத்தில் தோன்றி வெள்ளானைச் சருக்கத்தில் முடிவதும் பெரிய புராணம் சுந்தரர் பற்றிய காவியமே என்பதை வலியுறுத்துவதாகும். பெருங் காவியத்து இலக்கணங்களான நாற்பொருள் கூறல் முதலியன இதன்கண் நன்முறையில் அமைந்துள்ளன என்பது கற்றவர் அறிந்ததே இதனை ஒவ்வொன்றாகக் கூறின் விரியும்.' 1. தமிழ் நூற் புலமை பெருங் காவிய நிலைக்கு ஒத்து விளங்கும் பெரிய புராணத்தைச் செய்த ஆசிரியர் சேக்கிழார் பெருமான், தமக்கு முற்பட்ட எட்டுத்தொகை, பத்துப்பாட்டு, திருக்குறள், சிலப்பதிகாரம், மணிமேகலை, சிந்தாமணி என்ற பழைய இலக்கியங்களைப் பழுதறப் படித்த பெரும் புலவர் என்பது அவரது காவியத்தால் அறிய முடிகிறது. அவர் இந்நூற் கருத்துக்களை எங்ங்ணம் தம் நூலுள் எடுத்தாண்டுள்ளனர் என்பதை விளக்க, நூலுக்கு இரண்டொரு சான்றுகள் கூறிச் செல்வோம். . புறநானூறு 1. சேக்கிழார் திருநகரச் சிறப்பில் (செ. 14 அரசன் தன் நாட்டு உயிர்கட்குக் கண்ணும் உயிரும் போன்றவன்' என்றும் புகழ்ச் சோழர் புராணத்தில் (செ. 33) மன்னவன் தன் நாட்டு உயிர்கட்கு உயிர் என்றும் கூறியிருத்தல், - நெல்லும் உயிரன்றே நீரும் உயிரன்றே மன்னன் உயிர்த்தே மலர்தலை யுலகம் என்ற புறநானூற்றுச் செய்யுள் (186) கூற்றோடு ஒத்துவரல் காண்க.