உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பெரிய புராண ஆராய்ச்சி.pdf/184

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

186 பெரியபுராண ஆராய்ச்சி 1. கண்ணப்பர் புராணத்தில் (செ. 30 கண்ணப்பரது கன்னிவேட்டை விழாவிற்காக வந்த வேட்டுவச் சிற்றரசர் குறிஞ்சி நிலப் பொருள்களை எடுத்துவந்து தம் அரசனுக்குக் காணிக்கையாகத் தந்தனர் என்ற செய்தியும் சிலப்பதிகாரம்-காட்சிக் காதையில் செங்குட்டுவனைக் காணவந்த வேட்டுவக் குடிகள் குறிஞ்சி நிலப் பொருள்களைக் கொண்டு வந்தனர் (வரிகள் 37 - 55 என்ற செய்தியும் ஒன்றுபட்டனவாகும். 2. கரிகாலன் இமயம் சென்று புலிப்பொறி பொறித்து மீண்ட செய்தியைச் சேக்கிழார் திருக்குறிப்புத் தொண்டர் புராணத்தி (செ. 85லும் புகழ்ச் சோழர் புராணத்தி செ1லும் கூறியுள்ளது. சிலப்பதிகாரம் இந்திரவிழவூர் எடுத்த காதை (வரிகள் 17, 95-98 அடிகளுக்கும் அவற்றின் உரைக்கும் பொருத்தமாதல் காணத்தக்கது. மணிமேகலை 1. நாட்டுச் சிறப்பில் (செ. 2 அகத்திய முனிவன் கமண்டலத்தினின்று கவிழ்ந்த நீரே காவிரியாறாகப் பெருக்கெடுத்தது என்ற சேக்கிழார் கூற்றும் அமர முனிவன் அகத்தியன் தனது கரகம் கவிழ்த்த காவிரிப் பாவை என்ற மணிமேகலை அடிகளும் பதிகம்-வரி 11 &12 ஒன்றேயன்றோ? 2. தடுத்தாட்கொண்ட புராணத் (செ. 174 தொடராகிய இலவயிதழ்ச் செந்துவர்வாய்' என்பதும், இலவிதழ்ச் செவ்வாய்காணாயோ நீ எனவரும் மணிமேகலைத் தொடரும் காதை 20 வரி 51 பொருளிலும் சொல்லிலும் ஒன்றுபடல் காண்க. 3. ஐம்படை சதங்கை சாத்தி எனவரும் பெரிய புராணச் செய்யுள் தொடரும் தடுத்தாட்ட4. அமளித் துஞ்சும் ஐம்படை தாலிக் குதலைச் செவ்வாய்க் குறுநடைப் புதல்வர் எனவரும் மணிமேகலை துயில் எழுப்பிய காதை, அடி 56-57) அடிகளும் ஒப்பு நோக்கத் தக்கன. 4. மங்கையர் வதன சீத மதிஇரு மருங்கும் ஒடிச் செங்கயல் குழைகள் நாடு....... எனவரும் தடுத்தாட்கொண்ட புராணச் செய்யுள் 1 அடிகளை, செங்கயல் நெடுங்கண் செவிமருங் கோடி எனவரும் மணிமேகலை பளிக்கறை.வரி 101 அடியுடன் ஒப்பு நோக்குக.