உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பெரிய புராண ஆராய்ச்சி.pdf/185

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சேக்கிழாரது நூலாசிரியப் பண்பு 187 5. என்றுரைத்த சாரிபுத்தன் எதிர்வந் தேற்க இருந்தவத்துப் பெருந்தன்மை அன்பர் தாமும் நன்றுமது தலைவன்தான் பெற்றா னென்று - நாட்டுகின்ற முத்திதான் யாவது? என்றார்; நின்றவுரு வேதனையே குறிப்புச் செய்கை நேர்கின்ற ஞானவகை நிகழ்ந்த ஐந்தும் ஒன்றியகந் தத்தவிவே முத்தி என்ன உரைசெய்தான் பிடகத்தின் உணர்வு மிக்கான் எனவரும் பாவின் பின் இரண்டடிகள் சம்பந்தர் புராணம் 916) உருவு நுகர்ச்சி குறிப்பே பாவனை உள்ள அறிவிவை ஐங்கந்தம் ஆவன எனவரும் மணிமேகலை காதை 30 வரி 189-190 அடிகளோடு ஒன்றுபடல் காண்க. சிந்தாமணி சேக்கிழார் சிந்தாமணியை நன்றாகப் படித்துத் துய்த்தவர் என்பதற்குப் பல சான்றுகள் காட்டலாம். இடமஞ்சிச் சில காட்டுதும். 1. திருக்குறிப்புத் தொண்டர் புராணத்தில் (செ26 வயற் சிறப்பைக் கூறும் இடத்தில், பசிய வயல்களுக்கிடையில் உள்ள தாமரை மலர்கள்மேல் சங்குகள் இருக்கும் தோற்றம் ஊர்கோளால் பரிவேடம்) சூழப்பட்ட மதியின் தோற்றத்தை ஒத்திருந்தது என்று சேக்கிழார் குறித்தார். இந்த உவமையைச் சிந்தாமணி ஆசிரியர், கட்டழற் கதிரை ஊர்கோள் வளைத்தவா வளைத்துக் கொண்டார் என்று (136 ஆண்டிருத்தல் காண்க 2. கண்ணப்பர் சிவனைவிட்டு நீங்காமைக்கு நாணன் (செ. 116) வங்கினைப் பற்றிப் போதா வல்லுடும் பென்ன நீங்கான் என்று கூறிய உடும்பைப் பற்றிய உவமையே சிந்தாமணியில் (செ. 2887) தணக்கிறப் பறித்த போதும் தானளை விடுத்தல் செல்லா நிணப்புடை உடும்பன் னாரை என்று கூறப்பட்டிருத்தல் காண்க.