உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பெரிய புராண ஆராய்ச்சி.pdf/186

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

188 பெரியபுராண ஆராய்ச்சி 3. சாலிநீள் வயலின் ஓங்கித் தந்நிகர் இன்றி மிக்கு வாலிதாம் வெண்மை உண்மைக் கருவினாம் வளத்த வாகிச் சூல்முதிர் பசலை கொண்டு சுருள் விரித் தரனுக் கன்பர் ஆயின சிந்தை போல அலர்ந்தன கதிர்கள் எல்லாம். (பெ. பு: நாட்டுச் சிறப்பு, செ, 21) என்ற சேக்கிழார் பாடல் சொல்லரும் சூல்பசும் பாம்பின் தோற்றம்போல் மெல்லவே கருவிருந் தின்று மேலலார் செல்வமே போல்தலை நிறுவித் தேர்ந்தநூல் கல்விசேர் மாந்தரின் இறைஞ்சிக் காய்த்தவே என்ற சிந்தாமணிப் பாடலின் (55) எதிரொலியன்றோ? 4. மழலை மென்கிளி மருதமர் சேக்கைய மருதம் என்பது பெரிய புராணச் செய்யுள் அடி திருக்குறிப்பு -10) இத்துடன், கிளிவளர்பூ மருதணிந்து என்ற சிந்தாமணி (செ. 64) த் தொடரை ஒப்புநோக்குக. 5. கற்பகப்பூந் தளிரிடிபோய் காமருசா ரிகைசெய்ய உற்பலமென் முகிழ்விரல்வட் டணையோடும் கைபெயரப் பொற்புறுமக் கையின்வழிப் பொருகயற்கண் புடைபெயர அற்புதப்பொற் கொடிநுடங்கி ஆடுவபோல் ஆடுவார் என்ற (அப்பர்-420 பெரிய புராணப் பாடற் குறிப்பு மாணிழை வளைக்கை தம்மால் வட்டணை போக்கு கின்றாள் (1264) கார்க்கொசி கொம்பு போலப் போந்துகைத் தலங்கள் காட்டி என்ற சிந்தாமணித் தொடர்களுடன் நோக்குக. 6. யாழில்எழும் ஒசையுடன் இருவர்மிடற் றிசைஒன்றி எனவரும் பெரிய புராணக் (சம்பந்தர். 136 கருத்தும், . . இருங்கடற் பவளச் செவ்வாய் திறந்தவள் பாடி னாளோ நரம்பொடு வீணை நாவின் நவின்றதோ என்று நைந்தார் (செ. 662)