உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பெரிய புராண ஆராய்ச்சி.pdf/187

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சேக்கிழாரது நூலாசிரியப் பண்பு 189 வீணைச் சுகிர்புரி நரம்பும் நம்பி ஊழ்மணி மிடறும் ஒன்றாய்ப் பணிசெய்தவாறு செ 733) எனவரும் சிந்தாமணி அடிகள் கருத்தும் ஒப்புநோக்கிச் சுவைக்கத்தக்கன அல்லவா? தொல்காப்பியம் சேக்கிழார் தொல்காப்பியத்தை நன்றாகப் படித்தவர் என்பதற்குப் பல சான்றுகள் காட்டலாம். 1. தொல்காப்பியம் உவமவியல் 11ஆம் சூத்திரத்தில் வரும் பல்குறிப்பினவே என்ற மிகையை இளம்பூரணர் விளக்கி"அத்து என்பதும் உவமவுருபாக வரும்" எனக் கூறி, அதற்குக் கலித்தொகை 14ஆம் செய்யுளில் உள்ள துணைமலர் எழில்நீலத் தேந்தெழில் மலருண்கண்' என்ற அடியில் வரும் அத்து என்பது போல என்ற பொருளில் வந்த உவமைவுருபு என்றார். சேக்கிழார். செய்யகோல் அபயன் திருமணத் தோங்கும் திருக்கயி லாயநீள் சிலம்பு என்று திருமலைச் சிறப்பினைக் கூறும் இடத்தில் செ12) "அத்து" என்பதை உவமவுருபாக அமைத்துள்ள நயம் பாராட்டற் பாலது. இளம்பூரணர் ஏறத்தாழக் கி.பி. 11ஆம் நூற்றாண்டினர் என்பர் அறிஞர். அது கோடற்பாலதாயின், சேக்கிழார் தொல்காப்பியத்தையும் அதற்குள்ள இளம்பூரணர் உரையையும் நுட்பமாகப் படித்தவர் என்று கொள்ளலாம். 2. மாயோன் மேய காடுறை உலகம் என்பது தொல்காப்பியச் சூத்திர வரி அகத்திணை இயல் சூ 5. இக் கருத்தினைச் சேக்கிழார் திருக்குறிப்புத் தொண்டர் புராணத்தில் (செ18 - - முல்லையின் தெய்வமென் றருந்தமிழ் உரைக்கும் செங்கண் மால் என்று விளக்கியிருத்தல் காண்க. இங்கு "அருந்தமிழ்" என்பது தொல்காப்பியம் என்பதனையாதல் இறையனார் களவியலாதல் குறிப்பதாகலாம். இறையனார் களவியல் உரை இதன் காலம் கி.பி. 7 ஆம் நூற்றாண்டென்பது அறிஞர் கொள்கை சிலர் பிற்பட்டது என்பர். அஃது எங்ங்னமாயினும் இது சேக்கிழார்க்கு முற்பட்டது என்பதை அனைவரும் ஒப்புவர். இந்நூலைச் சேக்கிழார் அழுத்தமாகப் படித்தவர் என்பது நன்கு தெரிகிறது. .