உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பெரிய புராண ஆராய்ச்சி.pdf/188

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

190 பெரியபுராண ஆராய்ச்சி 1. சடங்கவி சிவாசாரியார், சுந்தரர் குலம் முதலியவற்றை ஆராய்ந்து, ஒத்த பண்பினால் அன்பு நேர்ந்தார் என்பது கூறப்பட்டுள்ளது (தடுத்தாட்....... செ8). இதனுடன், இவனும் பதினாறாட்டைப் பிராயத்தனாய் இவளும் பன்னிராட்டைப் பிராயத்தளாய் ஒத்த பண்பும் ஒத்த நலனும் ஒத்த அன்பும் ஒத்த செல்வமும் ஒத்த கல்வியும் உடையவராய்...' எனவரும் களவியல் உரை (சூ ஒப்பு நோக்கத்தக்கது. 2. சுந்தரரை முதன்முதல் கண்ட பரவையார்க்கு மனத்தில் அடக்க முடியாத - இதற்குமுன் அநுபவத்தில் வாராத ஒரு வேட்கை (புதிய விருப்பம், தான் கைக்கொண்டு ஒழுகிய நாணம் - மடம் - அச்சம் - பயிர்ப்பு என்ற பெண்மைக் குணங்கள் நான்கினையும் அடக்கி மேலே எழுந்தது என்று சேக்கிழார் தடுத்தாட்.143 கூறியுள்ளார். இக்கருத்து, வேட்கை என்பது என்னோவெனின், ஒருவரை ஒருவர் இன்றியமையாமை, அவ்வின்றியமையாது நின்ற வேட்கை எல்லா உணர்வினையும் நீக்கித் தானேயாய் நாண்வழிக் காசு போலவும் நீர்வழி மிதவை போலவும் பான்மை வழிக்கூடி இருவர் உயிரையும் புணர்விக்கும்.நாணம் முதலிய நான்கும் புனல் ஓடு வழியிற்.புல் சாய்ந்தாற் போல வேட்கையால் மீதூரப்பட்டுச் சாய்ந்து கிடப்பன, என்ற களவியல் உரை (சூ.2) யிற் காண்க, சமயநூற் புலமை திருமுறைகள் 1-7 சேக்கிழார் முதல் ஏழு திருமுறைகளையும் அழுத்தந்திருத்தமாகப் படித்து இன்பப்பட்டவர் என்பது அவர் கூறியுள்ள மூவர் புராணங்களிலிருந்து நன்குணரலாம். சேக்கிழார் அத்திருப்பதிகங்களைத் தம் புராணத்தில் கையாண்டுள்ள சில முறைகளைக் காண்போம். 1. பல இடங்களில் பதிக முதற்குறிப்பே தரப்பட்டுள்ளது. பித்தாபிறை சூடி எனப் பெரிதாந்திருப் பதிகம் இத்தாரணி முதலாம்.உல கெல்லாம்.உய எடுத்தார் 1 மாதர்ப் பிறைக்கண்ணி யானை மலையான் மகளொடும் என்னும் கோதறு தண்டமிழ்ச் சொல்லால் குலவு திருப்பதி கங்கள் 2 அருவிகண் வார்வுறப் பாடலுற்றார் - - அங்கமும் வேதமும் என்றெடுத்து 3