உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பெரிய புராண ஆராய்ச்சி.pdf/189

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சேக்கிழாரது நூலாசிரியப் பண்பு 191 2. சில இடங்களில் பதிகத்தின் முதலும் இறுதியும் குறிக்கப்பட்டிருக்கும். ஈன்றாளு மாய்எனக் கெந்தையு மாகி எனவெடுத்துத் தோன்றாத் துணையாய் இருந்தனன் தன்னடி யோங்கட் கென்று வான்தாள் புனற்கங்கை வார்சடை யானைமுற் றெள்வுயிர்க்கும் சான்றாம் ஒருவனைத் தண்டமிழ் மாலைகள் சாத்தினரே. 1 பந்தனாய்ப் பாடமாட்டேன் என்றுமுன் எடுத்துப் பண்ணால் அத்தாவுன் ஆடல் காண்பான் அடியனேன் வந்த வாறென் (று) இத்திறம் போற்றி நின்றே இன்தமிழ் மாலை பாடிக் கைத்திருத் தொண்டு செய்யும் காதலிற் பணிந்து போந்தார். 2 செம்மைபெற எடுத்ததிருத் தோடுடைய செவியன் எனும் மெய்மைமொழித் திருப்பதிகம் பிரமபுரம் மேவினார் தம்மை அடையாளங்க ளுடன் சாற்றித் தாதையார்க்(கு) எம்மைஇது செய்தபிரான் இவனன்றே என இசைத்தார். ' 3 3. நாயன்மார் பதிகச் செய்யுளே புராணச் செய்யுளில் அமைக்கப்பட்டுள்ளது. செய்யமா மணிஒளிசூழ் திருமுன்றின் முன்தேவா சிரியன் சார்ந்து, கொய்யுலா மலர்ச்சோலைக் குயில்கூவ மயில்ஆலும் ஆரூராரைக் கையினால் தொழாதொழிந்து கனியிருக்கக் காய்கவர்ந் தகவிவனேன் என் ஹெய்தரிய கையறவால் திருப்பதிகம் அருள்செய்தங் கிருந்தார் அன்றே. 1