உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பெரிய புராண ஆராய்ச்சி.pdf/190

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

192 பெரியபுரான ஆராய்ச்சி சடையானை எவ்வுயிர்க்கும் தாயா னானைச் சங்கரனைச் சசிகண்ட மவுலி யானை விடையானை வேதியனை வெண்ணிற் றானை விரவாதார் புரமூன்றும் எரியச் செற்ற படையானைப் பங்கயத்து மேவி னானும் பாம்பணையில் துயின்றானும் பரவும் கோலம் உடையானை உடையானே தகுமோ இந்த ஒள்ளிழையாள் உள்மெலிவென் றெடுத்துப்பாட. 2 மீளா அடிமை எனஎடுத்து மிக்க தேவர் குலமெல்லாம் மாளா மேநஞ் சுண்டருளி மன்னி இருந்த பெருமானைத் தாளா தரிக்கும் மெய்யடியார் தமக்காம் இடர்நீர் தரியீர் என்(று) ஆளாந் திருத்தோ ழமைத்திறத்தால் அஞ்சொற் பதிகம் பாடினார். ' 3 4. (a) பதிகத்தின் கருத்துப் பல பாக்களில் விளக்கப்பட்டிருக்கும். சம்பந்தர், தோடுடைய என்று தொடங்கிப் பாடிய முதற் பதிகத்தின் கருத்தைச் சேக்கிழார் பல பாக்களில் விளக்கிக் கூறல் காண்க: எல்லையிலா மறைமுதல்மெய் யுடனெடுத்த எழுதுமறை மல்லல் நெடுந் தமிழாலிம் மாநிலத்தோர்க் குரைசிறப்பப் பல்லுயிருங் களிகூரத் தம்பாடல் பரமர்பால் செல்லுமுறை பெறுவதற்குத் - திருச்செவியைச் சிறப்பித்து. 1 செம்மைபெற எடுத்ததிருத் தோடுடை செவியன் எனும் மெய்ம்மைமொழித் திருப்பதிகம் பிரமபுரம் மேவினார் தம்மை அடையாளங்க - ளுடன்சாற்றித் தாதையார்க் கெம்மையிது செய்தபிரான் இவனன்றே என இசைத்தார். 2