உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பெரிய புராண ஆராய்ச்சி.pdf/191

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சேக்கிழாரது நூலாசிரியப் பண்பு 193 மண்ணுலகில் வாழ்வார்கள் பிழைத்தாலும் வந்தடையின் கண்ணுதலான் பெருங்கருணை கைக்கொள்ளும் எனக்காட்ட எண்ணமிலா வல்லரக்கன் எடுத்துமுறித் திசைபாட அண்ணலவற் கருள்புரிந்த ஆக்கப்பா டருள் செய்தார் . 3 தொழுவார்க்கே அருளுவது சிவபெருமான் எனத்தொழார் வழுவான மனத்தாலே மாலாய மாலயனும் இழிவாகுங் கடுவிலங்கும் பறவையுமாய் எய்தாமை விழுவார்கள் அஞ்செழுத்துத் துதித்துய்ந்த படிவிரித்தார். 4 வேதகா ரணராய - வெண்பிறைசேர் செய்யசடை நாதன்நெறி அறிந்துய்யார் தம்மிலே நலங்கொள்ளும் போதமிலாச் சமண்கையர் புத்தவழி பழியாக்கும் ஏதமே எனமொழிந்தார் எங்கள்பிரான் சம்பந்தர் 5 (b) தாம் இருந்த மடத்திற்குச் சமணர் வைத்த தீயைச் சம்பந்தர் "பையவே.சென்று பாண்டியற்காக" என்று ஏவியபொழுது "பையவே" என்று குறித்தமைக்குச் சேக்கிழார் காரணங் காட்டல் படித்தின்புறத்தக்கது. பாண்டிமா தேவியார் தமது பொற்பில் - பயிலுநெடு மங்கலநாண் பாது காத்தும் ஆண்டகையார் குலச்சிறையார் அன்பினாலும் . அரசன்பால் அபராத முறுத லாலும் மீண்டுசிவ நெறியடையும் விதியி னாலும் வெண்ணிறு வெப்பகலப் புகலி வேந்தர் திண்டியிடப் பேறுடையன் ஆத லாலும் - திப்பிணியைப் பையவே செல்க என்றார்."