உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பெரிய புராண ஆராய்ச்சி.pdf/192

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

194 பெரியபுராண ஆராய்ச்சி (5) (a) சேக்கிழார், நாயன்மார் பதிக வகைகளை அப்படியே தம் பாக்களில் வைத்துப் பாடியுள்ளார். சான்றாக, 'அப்பர் திருப்பூந்துருத்தி மடத்தில் தங்கி இருந்தபொழுது (1) பல்வகைத் தாண்டகம் (2) பரவும் தனித்தாண்டகம் (3) அடைவு திருத்தாண்டகம் (4) திரு அங்கமாலை முதலியவற்றைப் பாடினார்' என்று சேக்கிழார் ஒரே பாட்டில் இவ்வகைகளை அடக்கிக் கூறியிருத்தல் 岛町@T&° - (b) சம்பந்தர் அப்பரை முதன்முதல் சீகாழியிற் சந்தித்துத் தங்கியிருந்த பொழுது பலவகைப் பதிகங்கள் பாடினார் என்று சேக்கிழார் கூறியுள்ளது காண்க. செந்தமிழ் மாலை விகற்பச் செய்யுட்க ளான்மொழி மாற்றும் வந்தசொற் சிமாலை மாற்றும் வழிமொழி எல்லா மடக்கும் சந்த இயமகம் ஏகபாதம் தமிழி ருக்குக்குறள் சாத்தி எந்தைக் கெழுகூற் றிருக்கை ஈரடி ஈரடி வைப்பு. 1 நாலடி மேல்வைப்பு மேன்மை நடையின் முடுகுமி ராகம் சால்பினில் சக்கரம் ஆதி விகற்பங்கள் சாற்றும் பதிக மூல இலக்கிய மாக எல்லாப் பொருள்களும் முற்ற ஞாலத் துயர்காழி யாரைப் பாடினார் ஞானசம் பந்தர். 2 6. நாயன்மார் பதிகச் சந்தத்திலேயே அப்பதிகங்களைக் குறிக்கும் இடங்களில் சேக்கிழார் பாக்களும் அமைந்திருத்தல் இன்பமூட்டுவதாகும். la) பித்தா பிறைகுடி என்ற பதிகத்தைச் சுந்தரர் பாடினார் என்பதைக் கூறும் பெரிய புராணச் செய்யுட்கள் இந்தளப் பண்ணில் அமைந்திருத்தல் படித்தின் புறத்தக்கது. - கொத்தார்மலர்க் குழலாளொரு கூறாய்அடி யவர்.பால் மெய்த்தாயினும் இனியானை அவ் வியன் நாவலர் பெருமான் பித்தாபிறை சூடீ எனப் பெரிதாம்திருப் பதிகம்