உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பெரிய புராண ஆராய்ச்சி.pdf/193

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சேக்கிழாரது நூலாசிரியப் பண்பு 195 இத்தாரணி முதலாம்.உல கெல்லாம்.உய எடுத்தார். 1 முறையால்வரு மதுரத்துடன் மொழிஇந்தள முதலில் குறையாநிலை மும்மைப்படி கூடுங்கிழ மையினால் நிறைபாணியின் இசைகோள்புணர் நீடும்புகழ் வகையால் இறையான்மகிழ் இசைபாடினன் எல்லாம்நிகர் இல்லான். " 2 (b) அப்பர் திருவையாற்றைத் தரிசிக்கையில் பாடிய "மாதர்ப் பிறைக் கண்ணி" என்ற திருப்பதிகத்தைக் குறிக்கையில் சேக்கிழார் அதே சந்தத்தில் செய்யுள் செய்திருத்தல் படித்துச் சுவைக்கத் தக்கது. 'மாதர்ப் பிறைக்கண்ணி யானை மலையான் மகளொடும்’ என்னும் கோதறு தண்டமிழ்ச் சொல்லால் குலவு திருப்பதி கங்கள் வேத முதல்வர்ஐ யாற்றில் விரவுஞ் சராசரம் எல்லாம் காதல் துணையொடும் கூடக் கண்டேன் எனப்பாடி நின்றார். 1. கண்டு தொழுது வணங்கிக் கண்ணுத லார்தமைப் போற்றிக் கொண்ட திருத்தாண்ட கங்கள் குறுந்தொகை நேரிசை அன்பில் மண்டு விருத்தங்கள் பாடி வணங்கித் திருத்தொண்டு செய்தே அண்டர் பிரான் திரு.ஐயா றமர்ந்தனர் நாவுக் கரசர். " - 2 7. நாயன்மார் பாடலைக் கவி கூற்றாக அங்கங்கே அமைக்கும் வன்மையும் சேக்கிழார்க்கு உண்டு. சான்றாக ஒன்று காண்க. நமிநந்தியடிகள் சிறப்பை அப்பர் திருவாரூர்ப் பதிகத்திற் பாடியுள்ளார். ஆராய்ந் தடித்தொண்டர் ஆணிப்பொன் ஆரூர் அகத்தடக்கிப் பாருள் பரிப்பந்தம் பங்குனி உத்திரம் பாற்படுத்தான்