உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பெரிய புராண ஆராய்ச்சி.pdf/195

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சேக்கிழாரது நூலாசிரியப் பண்பு 197 அரனடியில் ஆன்மாவைச் சேர்ப்பது ஆகிய செய்திகளை முறையே 8, 9, 10, 11 ஆம் பாசுரங்களில் வைத்தோதுவதின் உட்கருத்தைச் சேக்கிழார் மிக்க அழகாக, 'மண்ணுலகில் வாழ்வார்கள் பிழைத்தாலும் வந்தடையின் கண்ணுதலான் பெருங்கருணை கைக்கொள்ளும், தொழுவார்க்கே அருளுவது சிவபெருமான்', 'சமண்கையர் புத்தர் வழி பழியாக்கும் ஏதமே என்று கூறுகிறார்." ஆற்றில் எதிர்சென்ற பதிகத்தின் பொருளை மிக்க விரிவாகச் சேக்கிழார் கூறல் கவனிக்கத்தக்கது." திருவாலங்காட்டுப் பதிகத்தின் முதற்பாட்டின் முதற்பகுதியிற் கூறப்பட்டுள்ள செய்தி பெரிய புராணத்தின் துணைக் கொண்டல்லது விளங்காது. காரைக்கால் அம்மையார் தலையாலே நடந்து சென்ற தலத்தைத் தாம் மிதிப்பதற்கு அஞ்சித் திருஞான சம்பந்தர் திருவாலங்காட்டின் எல்லைக்கு வெளியே தங்கினர். அவரது தூக்கத்தில் கனவில் ஆலங்காட்டப்பன் தோன்றி, "நம்மை அயர்த்தனையோ பாடுதற்கு?" என்று அருள் செய்தான். இவ்வாறு பெரிய புராணத்துட் கூறப்படுவதை அறிந்தாலன்றி இத்தலத் தேவாரத்து காணப்படும் 'துஞ்சவருவாரும் தொழுவிப்பாரும் வழுவிப்போய் நெஞ்சம் புகுந்தென்னை நினைவிப்பாரும் என்ற தொடரின் பொருள் விளங்காது." - - -- திருவாசகம் சேக்கிழார் திருவாசகத்தை நன்கு பயின்று அதனைப் பாராட்டியவர் என்பதற்குப் பல சான்றுகள் அவர் நூலிற் காண்கின்றன. 1 சண்டீசர் வரலாற்றைப் பற்றி இரண்டு செய்யுட்களில் திருத்தோள் நோக்கம் 6-7 கூறிச் சித்தம் சிவமாக்கிச் செய்தனவே தவமாக்கும் அத்தன்.' எனக் கூறியதைச் சேக்கிழார் தமது சண்டீசர் புராணத்தில் (செ. 59 - ஈறிலாதார் தமக்கன்பு தந்த அடியார் செய்தனவே தவமாம் அன்றோ சாற்றுங்கால் என்று ஆண்டிருத்தல் காணலாம். 2. சிந்தனை உனக்காக்கி, என்கண்ணை நின்தாமரை போன்ற பாதங்களுக்காக்கி என் வந்தனையும் அப் பாதங்கட்கே ஆக்கி, வாக்கினை உன் மணிவார்த்தைக் காக்கி" . என வருவது திருவாசகம். இதன் கருத்து முழுவதும் நேசநாயனார் புராணத்துச் செய்யுளில் அமைந்திருத்தல் காணலாம். இங்ங்னம் சொல்லும் பொருள் ஒன்றுபடும் இடங்கள் பல ஆகும். . திருமந்திரம் இதனையும் சேக்கிழார் நன்கு படித்தவர் என்பதற்குச் சான்றுகள் பல காட்டலாம்.