உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பெரிய புராண ஆராய்ச்சி.pdf/196

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

198 பெரியபுராண ஆராய்ச்சி 1. தில்லைவாழ் அந்தணர் புராணத்தில் (செ1) இறைவனது இலக்கணம் கூறும். ஆதியாய் நடுவு மாகி அளவிலா அளவு மாகிச் சோதியாய் உணர்வுமாகித் தோன்றிய பொருளுமாகி... என வருவதற்கும் யாரறி வாரெங்கள் அண்ணல் பெருமையை யாரறி வாரந்த அகலமும் நீளமும் பேரறி யாத பெருஞ்சுடர் ஒன்றதின் வேரறி யாமை விளம்புகின் றேனே எனவரும் திருமந்திரச் செய்யுட்கும் உள்ள பொருள் தொடர்பு காணத்தக்கது. 2. சண்டீசருக்கு ஐந்து வயதானதும் ஞானவுணர்வு பெருகியது என்பதைச் சேக்கிழார், - முந்தை அறிவின் தொடர்ச்சியினால் முகைக்கு மலரில் வாசம் போல் சிந்தை மலர உடன்மலரும் செவ்வி உணர்வு சிறந்ததால் ' என்று உவமை வாயிலாக விளக்கினார். இவ்வுவமையும் பொருளும் பூவினிற் கந்தம் பொருந்திய வாறுபோல் சிவனுக் குள்ளே சிவமணம் பூத்தது ' என்ற திருமந்திரத்தில் உள்ளமை காண்க திருமூலர் வரலாறு திருமூலரது வாக்குக்கொண்டே சேக்கிழார் பாடினார் என்பதற்குப் பல சான்றுகள் காட்டலாம்’ விரிவஞ்சி அவை விடுக்கப்பட்டன. சைவ சித்தாந்தம் சைவ சித்தாந்தக் கருத்துக்கள் பெரிய புராணம் முழுவதும் காண்கின்றன. சான்றுகள் இரண்டு காண்க 1. கண்ணப்பர் காளத்தி மலைமீது ஏறும்பொழுது அவரது மனமாற்றத்தை விளக்கும் செய்யுள் சைவசித்தாந்த நுட்பங்கள் பொருந்தியதாகும். அதனில் ஆணையாம் சிவம் என்பது அருளாகிய சிவம் அல்லது 'சத்தியாகிய சிவம் எனப் பொருள்படும். இக்கருத்துச் சேக்கிழார்க்குப் பின் எழுந்த சிவஞான போதத்துள் சூ. 2) காணலாம். 2. மானக்கஞ்சாறரது அடியார் பக்தியைக் கூறுமிடத்து, அவர் சிவன் அடியாரைச் சிவபெருமானாகக் கருதி வழிப்பட்டவர் என்று கூறிய கருத்து' சிவஞான போதத்துட் 12 ஆம் சூத்திரத்தும் அதன் உரையிலும் காணத்தக்கது.