உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பெரிய புராண ஆராய்ச்சி.pdf/197

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சேக்கிழாரது நூலாசிரியப் பண்பு 199 3. சிவனடியாராதலே பெரும்பேறு' என்று மானக்கஞ்சாறர் புராணத்தில் சேக்கிழார் கூறியுள்ளார். சேக்கிழார்க்குப் பிற்பட்ட சிவஞான சித்தியார். - வாழ்வெனும் மையல் விட்டு வறுமையாம் சிறுமை தப்பித் தாழ்வெனும் தன்மை யோடு சைவமாம் சமயம் சாரும் ஊழ்பெறல் அரிது" என்று இதனை விளக்கிக் கூறல் காண்க 4. அரிவாள் தாயர் புராணத்துள் (செ. 20 வரும் துடியிடைப் பாகமான தூயநற் சோதி என்ற தொடரில் உள்ள உமைபற்றிய குறிப்பு அருளைக் காட்டுவது அருளைப் பெண்ணாகக் கூறுவது மரபு. இக்கருத்தினை, அருளது சத்தி யாகும் அரன்றனக் கருளை யின்றித் தெருள்சிவ மில்லை; அந்தச் சிவமின்றிச் சக்தி இல்லை” என்ற சிவஞான சித்தியார் அடிகளிற் காண்க, பெரிய புராணத்துட் கூறப்படும் சைவசித்தாந்தக் கருத்துக்கள் பிற்காலச் சிவஞான போதம் முதலிய நூல்களிற் காணப்படுகின்றன. ஆயின், சேக்கிழார் இக்கருத்துகளை எந் நூல்களிலிருந்து கொண்டார் என்பது ஆராயத்தக்கது. 'இராச சிங்கன் (கிபி 685-720 சைவ சித்தாந்தத்தைப் பின்பற்றுபவன்' என்று கல்வெட்டுக் கூறலை நோக்க, கி.பி. 7, 8ஆம் நூற்றாண்டுகளில் வடமொழியிலோ - தமிழிலோ சைவ சித்தாந்த நூல்கள் இருந்திருத்தல் வேண்டும் என்பது புலனாகிறது. அவற்றுள் திருமந்திரம் ஒன்றெனக் கொள்ளலாம். இத்தகைய சமய நூல்கள் வளமுற்று இருந்தமையாற்றான் சேக்கிழார் சைவசித்தாந்தக் கருத்துக்களைத் தம் நூல் முழுவதும் குறித்துப் போந்தார். பல கலைப் புலமை இசைக் கலை தேவார காலமுதல் பிற்காலச் சோழராட்சி முடியத் தமிழகத்தில் திருமுறைகள் பெரு வழக்கில் இருந்தன. கோவில்களில் திருப்பதிகங்கள் பண்ணோடு பாடப்பட்டு வந்தன. அதனால் தமிழிசை பற்றிய பல நூல்கள்" இருந்திருத்தல் வேண்டும் என்பது தெரிகிறது. அங்ங்ணம் இசை பற்றிய நூல்கள் மிக்கிருந்தமையாற்றான் அடியார்க்கு நல்லார், சிலப்பதிகாரம் - அரங்கேற்று காதைக்குச் சிறந்த உரை எழுத முடிந்தது. அவ்விசை நூல்களைச் சேக்கிழார் படித்தவர் என்பது அவர் இசைபற்றிக் கூறும் பல பாக்களிலிருந்து நன்குணரலாம். சான்றாக இரண்டு இடங்களைக் காண்போம்.