உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பெரிய புராண ஆராய்ச்சி.pdf/198

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

200 பெரியபுராண ஆராய்ச்சி 1. இறைவனால் தடுத்து ஆட்கொள்ளப்பட்ட சுந்தரர் முதன்முதல் திருவெண்ணெய் நல்லூர்க் கோவிலில் பாடிய பித்தா பிறைசூடி என்று தொடங்கும் பதிகத்தை இந்தளம்' என்ற பண்ணில் பாடினார் என்பதைக் கூறும் இடத்து, சேக்கிழார் விளக்கும் பண்வகை முதலியன இசைப் புலமை உடையவரே நன்குணர்ந்து இன்புறக் கூடும்." முறையால்வரு மதுரத்துடன் மொழிஇந்தள முதலில் குறையாநிலை மும்மைப்படி கூடுங்கிழ மையினால் நிறைபாணியின் இசைக்கோள்புணர் நீடும்புகழ் வகையால் இறையான்மகிழ் இசைபாடினன் எல்லாம்நிகர் இல்லான். இப்பாட்டில் இசைபற்றிக் கூறப்படும் நுட்பங்களின் விளக்கம் திரு C.K.S. முதலியார் பெரிய புராணத்திற் கண்டு மகிழலாம்." 2. ஆனாயர் புராணத்தில் புல்லாங்குழலைத் தேர்ந்தெடுத்துச் செய்யும் முறை" அக்குழல் வைத்து ஆனாயர் பாடும் முறை” அக்குழல் இசையால் உலகத்து உயிர்கள் அடைந்த இன்பம்" என்பவற்றை மிக்க விளக்கமாகக் கூறியுள்ளதை நோக்க, சேக்கிழார் இத்துறையிற் பண்பட்ட புலமையுடையார் என்பதை நன்குணரலாம். முந்தைமறை நூன்மரபின் மொழிந்தமுறை எழுந்தவேய் அந்தமுதல் நாலிரண்டில் அறிந்துநரம் பறுதானம் வந்ததுளை நிரையாக்கி வாயுமுதல் வழங்குதுளை அந்தமில்சி இடையீட்டின் அங்குலிஎண் களிலமைத்து. 1 முத்திரையே முதலனைத்தும் முறைத்தானம் சோதித்து வைத்ததுளை ஆராய்ச்சி வக்கானை வழிபோக்கி ஒத்தநிலை உணர்ந்ததற்பின் ஒன்றுமுதல் பலமுறையாம் அத்தகைய ஆரோசை அமரோசை களினமைத்தார். 2 மாறுமுதற் பண்ணின்முன் வளர்முல்லைப் பண்ணாக்கி ஏறியதா ரமும்உழையும் கிழமைகொள இடுந்தானம் x ஆறுலவும் சடைமுடியார் அஞ்செழுத்தின் இசைபெருகக் கூறியபட் டடைக்குரலாங் கொடிப்பாலை யினில்நிறுத்தி. 3 ஆயஇசைப் புகல்நான்கின் அமைந்தபுகல் வகையெடுத்து மேயதுளை பற்றுவன விடுப்பனவாம் விரல்நிறையிற் சேயவொளி இடையலையத் திருவாளன் எழுத்தஞ்சும் . தூயஇசைக் கிளைகொள்ளும் துறையஞ்சின் முறைவிளைத்தார். 4.