உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பெரிய புராண ஆராய்ச்சி.pdf/199

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சேக்கிழாரது நூலாசிரியப் பண்பு 201 நடனக் கலை சேக்கிழார் நடனக்கலை நுட்பத்தையும் நன்கறிந்தவர் என்பது அப்பர் புராணச் செய்யுட்களால் அறியலாம். அப்பர் திருப்புகலூரில் தம் இறுதி நாட்களைக் கழிக்கையில் அவரது உள்ளத்தைப் பரிசோதிக்கச் சிவன் ஏவலால் தேவலோக நடன மாதர் வந்து அப்பர்முன் ஆடல் பாடல்கள் நிகழ்த்தினர் என்ற இடத்தில், அரிவையர்தம் ஆடல்பாடல் நுட்பங்கள் நன்கு விளக்கப்பட்டுள்ளன." பாதங்கள் சாயை செய்ய, கை வட்டணையோடும் பெயர, கண் கையின் வழிப் பெயர என்ற இம்மூன்றாலும் ஆடலின் இயல்பை எல்லாம் வடித்து எடுத்துக் காட்டியவாறாகும். கால், கை, கண் என்ற இம்மூன்றாலும் ஒன்றித்த அகப்பொருளைக் காட்டுவதே ஆடலின் நுட்பமும் அமைதியும் ஆகும்." இந்நடனக் கலை நுட்பங்கள் சிலப்பதிகாரம் போன்ற பண்டை நூல்களைக் கொண்டு சேக்கிழார் அறிந்தவராதல் வேண்டும். வானநூற் கலை சம்பந்தர் திருவலஞ்சுழியில் தங்கியிருந்த பொழுது இளவேனில் முதுவேனில் ஆயிற்று என்பதைச் சேக்கிழார் கூறல் நோக்கத்தக்கது. அது சூரியன் மிதுனராசியிற் சேர்ந்ததால், வெங்கதிர் பரப்பினான்; அதனால் முதுவேனிற் காலம் தொடக்கமாயிற்று என்பது. மிதுனம் இரட்டையாதலின் சேக்கிழார் அதனைத் துணைப்புணர்ஒரை' என்று குறித்தது” அவரது வானநூற் புலமையை நன்கு உணர்த்துகிறது. இங்ங்னமே சேக்கிழார் கார்காலம்’ பனிக்காலம்' இளவேனில்" முதலியன பற்றிக் கூறும் இடங்களில் எல்லாம் அவரது வானநூற் புலமை நன்கு விளங்கக் காணலாம். மகிழ்ந்த தன்தலை வாழுமந் நாளிடை வானில் திகழ்ந்த ஞாயிறு துணைப்புணர் ஒரையுட் சேர்ந்து நிகழ்ந்த தன்மையில் நிலவுமேழ் கடல்நீர்மை குன்ற வெகுண்டு வெங்கதிர் பரப்பலின் முதிர்ந்தது வேனில். சம்பந்தர் புராணம், செ. 384 மருத்துவக் கலை சேக்கிழார், தாம் பாடிய புராணத்தில் 1 சூலைநோய்" (2 கண்ணோய்" (3) பாம்புக்கடி (4) முயலகன் என்ற நோய்' (5 பணிநோய்' (6) வெப்பு நோய்" என்பவற்றைத் தெளிவாக விளக்கிக் கூறியுள்ளார். அவர் கூறியன மருத்துவ நூல்களில் கூறப்பட்ட உண்மைகளேயாம் என்பதை விளக்கச் சில சான்றுகள் தருவோம். -- -