உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பெரிய புராண ஆராய்ச்சி.pdf/201

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சேக்கிழாரது நூலாசிரியப் பண்பு 203 ஏழாம் வேகம் உடல் முழுவதும் செயலற்று விடுதல் உடல் சில்லிட்டு விடல் எட்டாம் வேகம் இறப்பு" இவற்றின் சாரம் அப்பூதி அடிகள் புராணத்துள் (செ. 25-28) தெளிவாகக் கூறப்பட்டுவிட்டது அன்றோ? 2. கண் நோய் கண்நோய்க்கு மூலிகைகள் பிழிதல் மரபு என்று சேக்கிழார் குறித்தமை மருத்துவ முறைக்கு ஒத்ததே ஆகும். (1) நந்தியாவட்டை மலர் (Tabernaemontana Coronaria Flower) (2) Gg;git QsT®äg; ®®® (Heliotropium Indicum) (3) STLD56 (SU Tdo (Argemone Mexicana Milk) (pg5cólula éD55 மருந்துகளாகும். இவற்றுட் பிரமதண்டுப் பாலினால், கண்கூச்சல் கண்ணருகல் கண்ஒழுகல் கண்ணோதல் கண்சிவத்தல் எல்லாம் கடிதேகும். என்று மருத்துவ நூல் கூறும்." 3. வெப்பு நோய் இது வடமொழியில் ஆகந்தும ஜ்வரம் எனப்படும். 'ஆகந்துகம் என்பது திடீரென்று அடி முதலிய தாக்குவதாலும் அடிபடுதல் சாபம் முதலியவற்றாலும் ஒர் ரூபம் இல்லாமல் திடீரென்று உண்டாகும் ஜ்வரம்." இந்த ஜ்வரம் நான்கு வகைப்படும். அவை (1) அபிகாத ஜ்வரம், (2) அபிஷங்க ஜவரம், (3) சாபஜ்வரம், (4) அபிசார ஜ்வரம் என்பன. இவற்றுள் சாட ஜ்வரம் ரிஷிகள், ஆசாரியர், தேவதைகள் முதலியவர்களால் இடப்படும் சாபத்தினால் உண்டாவது இது பொறுக்க முடியாத கொடிய ஜ்வரம்." இது வாய் பிதற்றலும் உடல் நடுக்கமும் உண்டாக்கும்." . நெடுமாறனுக்கு உண்டான வெப்பு நோய் சாப ஜ்வரமாம். அது சம்பந்தரால் ஏவப்பட்டது. அஃது அரசனுக்கு உடல் நடுக்கத்தையும் கொடிய உஷ்ணத்தையும் உண்டாக்கி விட்டது. மருத்துவப் புலவரால் அதனை ஒழிக்கமுடியவில்லை. அரசன் வாய் பிதற்றலானான்." எனவரும் சேக்கிழார் வாக்கு மேற் சொன்ன மருத்துவக் கூற்றுடன் பொருந்தி நிற்றல் காண்க. 4. சூலை நோய் இது ஒருவகைக் கொடிய வயிற்றுவலி. இது வாதபித்த கபங்கள் என்னும் மூன்றும் தம் நிலை மாறுவதால் உண்டாவது. இது பல