உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பெரிய புராண ஆராய்ச்சி.pdf/202

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

204 - பெரியபுராண ஆராய்ச்சி துன்பங்களோடு கூடியது. சிகிச்சைக்கு வசப்படாதது. இந்நோய்க்குரிய துன்பங்கள்-வயிற்றுக் குடைச்சல், இறைச்சல், நாவறட்சி, மூர்ச்சை பொருமல், வயிறு மந்தமாக இருத்தல், வாய் சுவையுணர்வு அற்று இருத்தல், கபம் அதிகரித்தல், பெருமூச்சு விடல், விக்குள் உண்டாதல் என்பன." இத்துன்பங்கள் சூலைநோயால் வருந்திய அப்பர்க்கு உண்டாயின என்பது அப்பர் பதிகத்தாலும் சேக்கிழார் பாக்களாலும்" நன்குணரலாம். இந்நோயின் கொடுமை கலிக்காமர் புராணத்தாலும் அறியலாம்." 5. முயலகன் நோய் "கொல்லிமழவன் மகள் இந்நோயால் வருந்தினள். இது பெரும்பிணி, இது மெய்யை வருத்தியது. மூர்ச்சையடையச் செய்தது உற்றார் உறவினர் அக்கோர நிலையைக் கண்டு புலம்பினர்" என்று சேக்கிழார் கூறியுள்ளார்." இது குமர கண்ட வலி' என்று சிலர் கூறுவர். இந்நோயினால் கண்ணும் வாயும் கோனும் கையும் காலும் ஒரு பக்கம் விட்டு விட்டு வலிக்கும். ஜ்வரம் காயும் தலை வலிக்கும் : மூர்ச்சை காணும் என்பர் மருத்துவ நூலார்’ இதனினும் வேறுபட்டது முயல் வலி என்பது இவ் வலிப்புடையார் வாய் மண்ணைக் கவ்வும் வாயில் நுரை தள்ளும் வழி விட்டும் சேர்ந்தும் நட்டமாய் நிற்கும் உடல் துள்ளத்துள்ள வலிக்கும் தோள் மார்பு பக்கமாகக் கூட்டிச் சுருக்குவிக்கும். சோகமும் துயரமும் மிகும் உணர்வு நீங்கும்" என்பது மருத்துவ நூற் கூற்று. 'முயல்வலி என்ற இந்நோயின் பெயருக்கும் பெரிய புராணம் கூறும் முயலகன்' என்ற பெயருக்கும் உள்ள ஒற்றுமையும் இந்நோய் பற்றி இரு நூல்களும் குறிப்பிடும் விவரங்களும் காண- சேக்கிழார் குறித்த 'முயலகன் என்பது மருத்துவ நூல் குறிக்கும் முயல்வலியாக இருக்கலாம் என்று நினைக்க இடமுண்டு p Lsd Hiri LjsdsDID (Physiology) மூர்த்தி நாயனார் புராணத்துள். அந்நாயனார் தம்முழங்கையைச் சந்தனத்திற்காகப் பாறையில் தேய்ந்தபோது 'கட்டும் புறந் தோல்நரம் பென்பு கரைந்து தேய்ந்தன என்று கூறப்பட்டுள்ளது கவனிக்கற்பாலது. உள்ளே நின்ற எலும்பு, நரம்பு, தசை இரத்தம் முதலியவற்றை ஒன்றாகப் பொதிந்து மூடி) மேலே கட்டிய புறத்தோல் முதலில் தேய்ந்தது. அதனை அடுத்து நரம்பும் அதன்பின் எலும்பும் தேய்ந்தன என்பது இதன் பொருள். இம்முறை வைப்பு உடல் நூலுக்கு இயைந்ததே யாகும். சேக்கிழாரது இவ்வுடல்நூற்புலம்ை அடுத்த செய்யுளிலும் காணலாம" அப்பர் புராணத்தில், அப்பர் கயிலைமலை அடிவாரத்தில் உடல் குறைந்து துன்புற்ற நிலையை விளக்குமிடத்தும் காணலாம்." – y --> -- .