உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பெரிய புராண ஆராய்ச்சி.pdf/203

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சேக்கிழாரது நூலாசிரியப் பண்பு 205 நீதி நூற் புலமை சேக்கிழார் சோழப் பெருநாட்டின் முதல் அமைச்சராதலின், அவர் நாட்டுச் சட்டங்களை நன்கு அறிந்திருந்தார் என்பது உறுதி அவற்றைத் தடுத்தாட்கொண்ட புராணத்தும் கண்ணப்பர் புராணத்தும் பிற இடங்களிலும் குறித்துச் செல்லல் படித்தின்புறத்தக்கது. 1. தடுத்தாட்கொண்ட புராணத்தில் 1. g., à (Oral Evidence) 2. 43u6Tib (Documentray Evidence) 3, <suari gmist (Circumstancial Evidence) TaTab 1. Lią Gana (Copy of thue document 2, epco gana (Orignal document) grafelb, 1 se Tairg (D, &T.L. (Safe custody of the village court), 2, 576755Tál (clerk of the village court) 3. daopulouff -oloa,3LTi (village panchayat) எனவும் கூறப்பட்டுள்ள வழக்குப் பற்றிய நுட்பமான செய்திகள் பெரும்பாலும் இந்நாள் நீதிமன்ற நடைமுறைகளோடு ஒத்துவரல் காணத்தக்கது." இங்ங்ணம் சேக்கிழார் கூறியுள்ள செய்திகள் அவர் காலத்துச் சோழப் பெருநாட்டு நீதிமன்றங்களில் நாடோறும் கையாளப்பட்டனவாகலாம். கிழவேதியரை மனிதராகவே கொண்டு இவ்வழக்கினைக் காண்போமாயின், இஃது இயல்பான நீதிமன்றத்தில் தீர்க்கப்பட்ட அற்றைநாள் வழக்கு என்பது நன்கு புலனாகும். 2. கண்ணப்பர் 'கண்ண்ப்பருடன் சென்ற வேடர்கள் (செ. 86) உடுக்கைபோன்ற கால்களை யுடையனவும் மடிந்த காதுகளையுடையனவுமான யானைக் கன்றுகளையும் சிறிய விலங்குக் குட்டிகளையும் தள்ளாடி நடந்துவரும் குல் கொண்ட பெண் விலங்குகளையும் வேட்டையாடவில்லை என்று சேக்கிழார் கூறியது கவனிக்கத்தக்கது. இப்பாட்டின்ால் வேட்டையின் நீதிமுறை எடுத்துக் காட்டப்பட்டது. இது கருணையை அடிப்படையாகக் கொண்ட நீதி தமது நீடித்த நலம் கருதி வேடர்கள் அவற்றைக் கொல்லாது விட்டனர் என்பது வெளிப்படைக் காரணம் என்னலாம். யானைகளின் பாதுகாப்புச் சட்டம் , வேட்டை விலங்குகளின் பாதுகாப்புச் சட்டம் விலங்குகளைக் கொடுமை QāL5&cogniã 3(Sã(5th & Lib (Prevention to cruelty to Animals Act) முதலியன இந்நாளிலும் அரசாங்கத்தார் விதித்துள்ளவையும் இக்கருத்தே பற்றியன. இச்சட்டங்களிலும் பெண்மான் முதலியவற்றைச் சுடலாகாதென்னும் விதி இருத்தலும் கவனிக்கத்தக்கது." சேக்கிழார் செய்யுட் சிறப்பு 1. சேக்கிழார் பாடிய செய்யுட்கள் பொதுமக்கள் உளங்கனிய ஆதலின், எளிமையும் இனிமையும் அமைந்துள்ளன. அவை செம்பாகமானவை: ஆற்றொழுக்குப் போல அமைதியான நடை கொண்டவை. 'எளிய நடை