உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பெரிய புராண ஆராய்ச்சி.pdf/204

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

206 பெரியபுராண ஆராய்ச்சி வேண்டும்' என்று கூறும் இக்காலத்தார் சேக்கிழார் செய்யுட்களைப் படித்து மகிழ்வாராக இங்குச் சான்றாகச் சில செய்யுட்களைத் தருதும் உலகெ லாமுணர்ந் தோதற் கரியவன் நிலவு லாவிய நீர்மலி வேணியன் அலகில் சோதியன் அம்பலத் தாடுவான் மலர்சி லம்படி வாழ்த்தி வணங்குவாம். 1 (கடவுள் வாழ்த்து) எம்பிரான், யான்செயும் பணிஎது? என்றனர். வலம்புலா மலர்ச்சடை வள்ளல் தொண்டனார் உம்பர்நா யகனும், இவ்வோடுன் பால்வைத்து நம்பி, நீ தருகநாம் வேண்டும் போ தென்று. 2 - (திருநீலகண்டர் புராணம் 15) பன்முறை உயிர்கள் எல்லாம் பாலித்து ஞாலங் காப்பான் தன்னெடுங் குடைக்கீழ்த் தத்தம் நெறிகளில் சரித்து வாழும் மன்னரை இன்றி வைகும் மன்னுல கெண்ணுங் காலை இன்னுயிர் இன்றி வாழும் யாக்கையை ஒக்கும் என்பார். 3 . (மூர்த்திநாயனார் புராணம் 29) அன்பினுக் களவு காணார் ஆனந்த வெள்ளம் மூழ்கி என்புநெக் குருக நோக்கி இறைஞ்சிநேர் விழுந்து நம்பர் முன்புநிற் பதுவும் ஆற்றார் மொழிதடு மாற ஏத்தி மின்புரை சடையார் தம்மைப் பதிகங்கள் விளம்பிப் போந்தார். - 4 (சம்பந்தர் புராணம் 585) மங்கையர்க்குத் தனியரசி எங்கள் தெய்வம் வளவர்திருக் குலக்கொழுந்து வளைக்கை மானி செங்கமலத் திருமடந்தை கன்னி நாடாள் தென்னர்குலப் பழிதீர்த்த தெய்வப் பாவை எங்கள்பிரான் சண்பையர்கோன் அருளி னாலே இருந்தமிழ்நா டுற்றஇடர் நீக்கித் தங்கள் பொங்கொளிவெண் திருநீறு பரப்பி னாரைப் போற்றுவார் கழல்எம்மால் போற்ற லாமே. 5 (மங்கையர்க்கரசியார் புராணம் 1)