உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பெரிய புராண ஆராய்ச்சி.pdf/212

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

214 பெரியபுராண ஆராய்ச்சி நண்ணிமா மறைக்குலங்கள் நாடவென்று நீடுமத் தண்நிலா அரும்புகொன்றை தங்குவேணி யார்தமைக் கண்ணில்நீடு பார்வையொன்று கொண்டுகாணும் அன்பர்முன் எண்ணில்பார்வை கொண்டுவேடர் எம்மருங்கும் ஏகினார். 2 - கண்ணப்பர் புராணம், 68 77 2. கண்ணப்பரின் வேட்டை தாளறுவன இடைதுணிவன தலைதுமிவன கலைமான் வாளிகளொடு குடல்சொரிதர மறிவனசில மரைம நீளுடல்விடு சரமுருவிட நிமிர்வனமிடை கடமா மீளிகொள்கணை படுமுடலெழ விழுவனபல உழையே. 1 பின்மறவர்கள் விடுபகழிகள் பிறகுறவயி றிடைபோய் முன்நடுமுக மிசையுருவிட முடுகியவிசை யுடனக் கொன்முனையடு சரமினமெதிர் குறுகியமுகம் உருவத் தன்னெதிரெதிர் பொருவனநிகர் தலையனபல கலைகள்.2 . கண்ணப்பர் புராணம் 79, 81 3. அப்பரைக் கொல்ல வந்த யானை நிலை பாசத்தொடை நிகளத்தொடர் பறியத்தறி முறியா மீசுற்றிய பறவைக்குலம் வெருவத்துணி விலகா ஊசற்கரம் எதிர்சுற்றிட உரறிப்பரி உழறா வாசக்கட மழைமுற்பட மதவெற்பெதிர் வருமால். 1 இடியுற்றெழும் ஒலியில்திசை இபமுட்கிட அடியில் படிபுக்குற நெறியப்பர் பவனக்கதி விசையில் கடிதுற்றடு செயலிற்கிளர் கடலிற்படு கடையின் முடிவிற்கனல் எனமுற்சினம் முடுகக்கடு கியதே. 2 மாடுற்றனை இவளிக்குலம் மறியச்செறி வயிரக் கோடுற்றிரு பிளவிட்டறு குறைகைக்கொடு முறியச் சாடுற்றிடு மதில்தெற்றிகள் சரியப்புடை அணிசெற் றாடுற்றகல் வெளியுற்றதவ் வடர்கைக்குல வரையே. 3 பாவக்கொடு வினைமுற்றிய படிறுற்றடு கொடியோர் நாவுக்கர செதிள்முற்கொடு நணுகிக்கரு வரைபோல் ஏவிச்செறு பொருகைக்கரி யினைவுய்த்திட வெருளார் சேவிற்றிகழ் பவர்பொற்கழல் தெளிவுற்றனர் பெரியோர். 4 அப்பர் புராணம் 111-114