உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பெரிய புராண ஆராய்ச்சி.pdf/211

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சேக்கிழாரது நூலாசிரியப் பண்பு 213 3. உடுப்பூர் வேடர் சேரி வருணனை குன்றவ ரதனின் வாழ்வார் கொடுஞ்செவி ஞமலி யார்த்த வன்திரள் விளவின் கோட்டு வார்வலை மருங்கு தூங்கப் பன்றியும் புலியும் எண்கும் கடமையும் மானின் பார்வை அன்றியும் பாறை முன்றில் ஐவனம் உணங்கும் எங்கும். 1 வன்புலிக் குருளை யோடும் வயக்கரிக் கன்றி னோடும் புன்தலைச் சிறும கார்கள் புரிந்துடன் ஆடல் அன்றி அன்புறு காதல் கூர அணையுமான் பிணைக ளோடும் இன்புற மருவி ஆடும் எயிற்றியர் மகளிர் எங்கும். 2 வெல்படைத் தறுகண் வெஞ்சொல் வேட்டுவர் கூட்டந் தோறும் கொல்எறி குத்தென் றார்த்துக் குழுமிய ஓசை அன்றிச் சில்லரித் துடியும் கொம்பும் சிறுகனா குளியுங் கூடிக் கல்லெனும் ஒலியின் மேலும் கறங்கிசை அருவி எங்கும். 3 ஆறலைத் துண்னும் வேடர் அயற்புலங் கவர்ந்து கொண்ட வேறுபல் உருவின் மிக்கு விரவுமான் நிரைக ளன்றி ஏறுடை வானந் தன்னில் இடிக்குரல் எழிலி யோடு மாறுகொள் முழக்கங் காட்டும் மதக்கைமா நிரைகள் எங்கும்.4 (கண்ணப்பர் புராணம் 3-6) 7. சேக்கிழார் தீயதைக் கூற அஞ்சும் இயல்பினர் என்பது நினைந்த அப்பரிசே செய்தான்" என்று முத்தநாதன் செயலைக் குறித்ததாலும், ஏனாதி நாதரது பகைவன் அவர் தலையை வாளால் வெட்டினான் என்பதற்குப் பதிலாகத் தன் கருத்தே முற்றுவித்தான்” என்று குறித்ததனாலும் பிறவற்றாலும் அறியலாம். * . . 8. சேக்கிழார் இடத்திற்கு ஏற்பச் சந்தங்கள் அமைத்துப் பாடலில் வல்லவர் என்பதைக் கீழ்வரும் பகுதியால் அறியலாம். 1. கண்ணப்பரின் கன்னிவேட்டைப் புறப்பாடு தாளில்வாழ் செருப்பர்தோல் தழைத்தநீடு தானையா வாளியோடு சாபம்மேவுகையர்வெய்ய வன்கணார் ஆளியேறு போலஏகும் அண்ணலார்முன் எண்ணிலாள் மீளிவேடர் நீடுகூட்டம் மிக்குமேல் எழுந்ததே. 1