உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பெரிய புராண ஆராய்ச்சி.pdf/210

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

212 பெரியபுராண ஆராய்ச்சி 2. கூருகிர்மெல் லடியளகின் குறும்பார்ப்புக் குழுச்சுழலும் வார்பயின்முன் றிலில்நின்ற வள்ளுகிர்நாய்த் துள்ளுபறழ் காரிரும்பின் சரிசெறிகைக் கருஞ்சிறார் கவர்ந்தோட ஆர்சிறுமென் குரைப்படக்கும் அரைக்கசைத்த இருப்புமணி. 2 வன்சிறுதோல் மிசையுழத்தி மகவுறக்கு நிழல்மருதும் தன்சினைமென் பெடையொடுக்குந் தடற்குழிசிப் புதைநீழல் மென்சினைய வஞ்சிகளும் விசிப்பறைதுங் கினமாவும் புன்தலைநாய்ப் புனிற்றுமுழைப் புடைத்தெங்கும் உடைத்தெங்கும் 3 செறிவலித்திண் கடைஞர்வினைச் செயல்புரிவை கறையாமக் குறியளக்க உனைக்குஞ்செங் குடுமிவா ரணச்சேக்கை வெறிமலர்த்திண் சினைக்காஞ்சி விரிநீழல் மருங்கெல்லாம் நெறிகுழற்புன் புலைமகளிர் நெற்குறுபாட் டொலிபரக்கும். 4 புள்ளுந்தண் புனற்கலிக்கும் பொய்கையுடைப் புடைஎங்கும் தள்ளுந்தாள் நடையசையத் தளையவிழ் குவளைமது விள்ளும்பைங் குழற்கதிர்நெல் மிலைச்சியபுன் புலைச்சியர்கள் கள்ளுண்டு களிதுங்கக் கறங்குபறை யுங்கலிக்கும். 5 திருநாளைப்போவார் புராணம் 6-10. நாகை நுளைப்பாடி வருணனை அந்நெ டுத்திரு நகர்மருங் கலைகடல் விளிம்பில் பன்னெ டுந்திரை நுரைதவழ் பாங்களின் ஞாங்கள் மன்னு தொன்மையின் வலைவளத் துணவினில் மலிந்த தன்மை வாழ்குடி மிடைந்தது தடநுளைப் பாடி. 1 புயல ளப்பன எனவலை புறம்பணை குரம்பை அயல ளப்பன மீன்விலைப் பசும்பொனி னடுக்கல் வியல ளக்கரில் விடுந்திமில் வாழ்நர்கள் கொணர்ந்த கயல ளப்பன பரத்தியர் கருநெடுங் கண்கள் . 2 உணங்கல் மீன்கவர் உறுநசைக் குருகுடன் அணைந்த கணங்கொள் ஓதிமம் கருஞ்சினைப் புன்னையங் கானல் அணங்கு நுண்ணிடை நுளைச்சியர் அசைநடைக் கழிந்து மனங்கொள் கொம்பரின் மருங்குநின் றிழியல மருளும் 3 வலைநெ டுந்தொடர் வடம்புடை வலிப்பவ ரொலியும் விலைப கர்ந்துமீன் குவைகொடுப் பவர்விளி யொலியும் தலைசி றந்தவெள் வளைசொரி பவர்தழங் கொலியும் அலைநெ டுங்கட லதிரொலிக் கெதிரொவி அனைய 4 -(அதிபத்தர் புராணம் 5-9)