உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பெரிய புராண ஆராய்ச்சி.pdf/209

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சேக்கிழாரது நூலாசிரியப் பண்பு 211 ஆனை யாமென நீறுகண்ட டடிச்சேரன் என்னும் சேணு லாவுசிர்ச் சேரனார் திருமலை நாட்டு வாணி லாவுபூண் வயவர்கள் மைத்துனக் கேண்மை பேண நீடிய முறையது பெருந்தொண்டைய நாடு. 2 கறைவி, ளங்கிய கண்டர்பாற் காதல்செய் முறைமை நிறைபு ரிந்திட நேரிழை அறம்புரிந் ததனால் பிறையு ரிஞ்செயிற் பதிபயில் பெருந்தொண்டை நாடு முறைமை யாமென உலகினில் மிகுமொழி உடைத்தால்.3 திது நீங்கிடத் திக்கலி யாமவு ணற்கு நாதர் தாமருள் புரிந்தது நல்வினைப் பயன்செய் மாதர் தோன்றிய மரபுடை மறைவயர் வல்லம் பூதி சாதனம் போற்றிய பொற்பினால் விளங்கும். 4 மருட்கொ டுந்தொழில் மன்னவன் இறக்கிய வரியை நெருக்கி முன்திரு வொற்றியூர் நீங்கவென் றெழுதும் ஒருத்தர் தம்பெருங் கோயிலின் ஒருபுறஞ் சூழ்ந்த திருப்ப ரப்பையும் உடையதத் திரைக்கடல் வரைப்பு 5 (திருக்குறிப்புத் தொண்டர் புராணம், 3-5, 30, 39) தொண்டை மானுக்கன் றருள்கொடுத் தருளும் தொல்லை வண்புகழ் முல்லைநா யகரைக் கொண்ட வெந்துயர் களை கெனப் பரவிக் குறித்த காதலின் நெறிக்கொள வருவார் வண்டு லாமலர்ச் சோலைகள் சூழ்ந்து மாட மாளிகை நீடுவெண் பாக்கம் கண்ட தொண்டர்கள் எதிர்கொள வணங்கிக் காயும் நாகத்தர் கோயிலை அடைந்தார். (ஏயர்கோன் புராணம் 2786) 6, 1 ஆதனுர்ச் சேரி வருணனை (2) நாகை நுளைப்பாடி வருணனை (3) உடுப்பூர் வேடர் சேரி வருணனை இவற்றைச் சொல் ஓவியங்களாகச் சேக்கிழார் தீட்டியுள்ள அருமைப்பாடு அறிந்து இன்புறற்பாலது. 1. ஆதனூர்ச் சேரி வருணனை மற்றவ்வூர்ப் பறம்பணையின் வயன்மருங்கு பெருங்குலையில் சுற்றம்விரும் பியகிழமைத் தொழிலுழவர் கிளைதுவன்றிப் பற்றியபைங் கொடிச்சுரைமேற் படர்ந்தபழங் கூரையுடைப் புற்குரம்பைச் சிற்றில்பல நிறைந்துளதோர் புலைப்பாடி, 1