உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பெரிய புராண ஆராய்ச்சி.pdf/208

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

210 பெரியபுராண ஆராய்ச்சி பொருவில் பொன்னித் திருநதியின் கரைவத் தெய்திப் புனிதநீர் மருவும் தீர்த்தம் மகிழ்ந்தாடி மருங்கு வடபாற் கரைஏறித் திருவிற் பொலியுந் திருப்புலியூர்ச் செம்பொன் மன்றுள் நடம்போற்ற உருகு மனத்தி னுடன்சென்றார் ஒழியா அன்பின் வழிவந்தார். 3 - (கழறிற்றறிவார் புராணம் 50.52) (3) சேரமான் தில்லையிலிருந்து திருவாரூர் சென்றதை 2 பாக்களில் குறித்திருத்தலையும் காண்க: அறிவின் எல்லை யாயதிருத் தில்லை எல்லை அமர்ந்திறைஞ்சிப் பிறிவி லாத திருவடியைப் பெருகு முள்ளத் திணிற்பெற்றுச் செறியும் ஞான போனகள்வந் . தருளும் புகலி சென்றிறைஞ்சி மறிசேர் கரத்தாள் கோயில்பல வணங்கி மகிழ்ந்து வழிக்கொள்ளவார் . 1. வழியிற் குழியிற் செழுவயலின் மதகின் மலர்வா விகளின்மடுச் சுழியிற் றரளத் திரைசொரியுந் துறைநீர்ப் பொன்னி கடந்தேறி விழியிற் றிகழுந் திருநுதலார் விரும்பு மிடங்கள் இறைஞ்சியுகக் கழிவிற் பெருவெள் ளமுங்கொள்ளாக் கழனி ஆரூர் கண்ணாற்றார். 2 - (agozi zbog Pazzi Araramozzi 67-62) 5. சேக்கிழார் அவ்வத் தலத்தைப் பற்றிக் கூறுகையில் அத்தலத் தொடர்பான கதைகளை மறவாது கூறும் இயல்புடையவர் என்பதைக் கீழ்வரும் சில எடுத்துக்காட்டுகளால் அறிக. நற்றி றம்புரி பழையனுர்ச் சிறுத்தொண்டர் நவைவந் துற்ற போதுதம் உயிரையும் வணிகனுக் கொருகால் சொற்ற மெய்ம்மையுந் தூக்கிஅச் சொல்லையே காக்கப் பெற்ற மேன்மையில் நிகழ்ந்தது பெருந்தொண்டை நாடு.1