உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பெரிய புராண ஆராய்ச்சி.pdf/207

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சேக்கிழாரது நூலாசிரியப் பண்பு 209 அன்பு மிக்க பெருங்கற்பின் அணங்கு திருவெண் காட்டம்மை முன்பு வந்து சிறுதொண்டர் வரவு நோக்கி முன்னின்றே இன்பம் பெருக மலர்ந்தமுகங் கண்டு பாத மிசைஇறைஞ்சிப் பின்பு கணவர் முகநோக்கப் பெருகுந் தவத்தார் செயல்வினவ. 5 -(சிறுத்தொண்டர் புராணம் 58) 4. சில ஆசிரியர்களைப்போல் வீணாக நூலைப் பெருக்குந் தன்மை சேக்கிழாரிடம் காணல் அருமையாம். அத்தகைய இடங்களுள் ஒன்றிரண்டினைக் காட்டுதும். 1. கண்ணப்பரைக் காளத்தி மலையிலிருந்து அழைத்தேக வந்த பெற்றோர் வறிதே மீண்டதை ஆசிரியர் 2 வரிகளில் கூறியது பாராட்டத் தக்கது. . நாணனொடு காடனும்போய் நாகனுக்குச் சொல்லியபின் ஊணுமுறக் கமுமின்றி அணங்குறைவா ளையுங்கொண்டு பேணுமக னார்தம்பால் வந்ததெல்லாம் பேதித்துக் காணுநெறி தங்கள் குறி வாராமல் கைவிட்டார். . 1 (கண்ணப்பர் புராணம் 153) 12 சேரமான் தம்மூரிலிருந்து தில்லை வந்த யாத்திரையை 3 பாக்களில் கூறியுள்ளமை போற்றத் தகுந்ததாம். . அந்நாட் டெல்லை கடந்தனைய அமைச்சர்க் கெல்லாம் விடையருளி மின்னார் மணிப்பூண் மன்னவனார் வேண்டு வாரை உடன்கொண்டு கொன்னார் அயில்வேல் மறவர்பயில் - . கொங்கள் நாடு கடந்தருளிப் பொன்னாட் டவரும் அணைந்தாடும் . பொன்னி நீர்நாட் டிடைப்போவார். 1 சென்ற திசையிற் சிவனடியார் - . சிறப்பி னோடும் எதிர்கொள்ளக் குன்றுங் கானும் உடைக்குறும்பர் - இடங்கள் தோறும் குறைவறுப்பத் துன்று முரம்பும் கான்யாறும் துறுகள் சுரமும் பலகடந்து வென்றி விடையார் இடம்பலவும் - மேவிப் பணிந்து செல்கின்றார். 2.