உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பெரிய புராண ஆராய்ச்சி.pdf/214

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

216 பெரியபுராண ஆராய்ச்சி (w) மருதம் : மருதநில அமைப்பு (செ. 20, பாலாற்று வருணனை (செ. 21-22) மருதநிலச் சிறப்பு (23-27), வேளாளரைக் கொண்ட மூதூர்கள் (செ28), சதுர்வேதி மங்கலங்கள் (செ. 29), திருவல்லம், திருமாற்பேறு, திருப்பாசூர் என்ற தலங்கள் (செ. 30-32) . . (v) நெய்தல் : நெய்தல் நில அமைப்பு (செ3), அந்நிலத்துத் தொழில்கள் (34, 35), மலர்கள் (36, 37), யாழ் (38), திரு ஒற்றியூர், மயிலாப்பூர், திருவான்மியூர் என்ற தலங்கள் 39-40) (3) இவற்றுடன் சேக்கிழார் விட்டிலர் இனித் திணை மயக்கம் (நிலங்கள் ஒன்றுடன் ஒன்று மயங்கல்) கூறலுற்றார்: () நெய்தலும் குறிஞ்சியும் மயங்குதல் அங்குள்ள தலம் மாமல்லபுரம் (செ41) (i) மருதமும் குறிஞ்சியும் மயங்குதல் (செ. 42 (ii) முல்லையும் குறிஞ்சியும் மயங்குதல் (செ. 43) (v) முல்லையும் நெய்தலும் மயங்குதல் (செ44) (v) முல்லையும் மருதமும் மயங்குதல் (செ. 45) (vi) நெய்தலும் மருதமும் மயங்குதல் (செ. 46 இங்ங்ணம் குறிப்பிட்ட ஒரு முறையை வைத்துக் கொண்டு இவ்வளவு தெளிவாகவும், அழகாகவும் நானிலத்தியல்பும் ஐந்திணை இயல்பும் திணை மயக்கமும் வேறு தமிழ்க் காவியங்களில் காணல் அரிதாகும். இவ்வருமைப் பாடடை, . திருத்தொண்டை நன்னாட்டு நானிலத்தைந் திணைவளமும் தெரித்துக் காட்ட மருத்தொண்டை ஆய்ச்சியர்சூழ் குன்றைநகர் குலகவியே வல்லான் அல்லால் கருத்தொண்டர் எம்போல்வார் எவ்வாறு தெரிந்துரைப்பார் !" என்று சிவஞான முனிவரே பாராட்டுவராயின், சேக்கிழார் பெருமானது செய்யுட் சிறப்பும் நிறைந்த புலமையும் சிறுவனாகிய நான் எங்ங்னம் எடுத்துரைக்க வல்லேன்?