உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பெரிய புராண ஆராய்ச்சி.pdf/218

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பிற்சேர்க்கை 1-10 1. அறுபத்துமூவர் ஊர்-மரபு-தொண்டு-காலம் 10. அதிபத்தர் - பரதவர் - நாகபட்டினம் (சோ - முதல் மீன் நாளும் சிவனுக்கு விட்டவர்; ஒரே மீன் கிடைத்த பொழுது அதனைச் சிவனுக்கு விட்டுப் பட்டினி கிடந்தவர் பொன் மீன் ஒன்றே கிடைத்த அன்றும் அதனைச் சிவனுக்கு விட்ட சிறந்த பக்தர் - கி.பி. 660-840. அப்பூதியார் - பிராமணர் - திங்களுர் (சோ - அப்பரையே தெய்வமெனக் கொண்டவர்; இறந்த மகனை மறைத்து அப்பருக்கு உணவு படைத்தவர்- கி.பி. 600-660. அமர்நீதியார் - வணிகர் - பழையாறை (சோ - சிவபிரான் தந்த கோவணச் சண்டை மனைவி மகனோடு துலைபுக்கவர் அப்பர்க்கு முற்பட்டவர் பாடல் பெற்றவர் - கி.பி. 400-600, அரிவாள்தாயர்-வேளாளர்-கணமங்கலம் (சோ - பிரசாதம் கால் இடறிக் கீழே விழத் தம் தலையை அரிய முயன்றார். உடனே லிங்கத்திலிருந்து கை வந்து தடுத்தது. அப்பரால் பாடப்பெற்றவர் - கி.பி. 400-600. ஆனாயநாயனார் - இடையர் - மங்கலவூர் (சோ - பஞ்சாட்சரத்தை 7 சுரங்கள் பொருந்தக் குழலில் வாசித்தவர் - கி.பி. 660-840. இசைஞானியார் - ஆதிசைவர்-திருநாவலூர் ந - சுந்தரர் தாயார், சிவனடியார் - கி.பி. 840-865, இடங்கழியர் - சிற்றரசர் - கொடும்பாளுர் (சோ - ஆலயப் பூசனைகள் நடத்தினார், நெல் திருட வந்த அடியார்க்கு வழங்கினார்; பலர்க்கும் தம் உடைமையெல்லாம் வழங்கினார் - கி.பி. 600-840. இயற்பகையார் - வணிகர் - புகார் (சோ - சிவனுக்கு மனைவியைத் தரத் துணிந்தவர்; எதிர்த்த உறவினரைக் கொன்றவர் - கி.பி. 660-840. இளையான்குடி மாறர் வேளாளர் - இளையான்குடிசோ - விதையைக் குற்றிச் சமைத்துச் சிவனடியாரை உண்பித்தவர் - கி.பி. 660-840 உருத்திர பசுபதியார் - பிராமணர் - திருத்தலையூர் (சோ - கழுத்தளவு நீரில் நின்று உருத்திர மந்திரம் செபித்தவர் - கி.பி. 660-840.