உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பெரிய புராண ஆராய்ச்சி.pdf/233

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அடியார் பெயர்கள் 之35 20. 21. 22. 23, 24. 25. 26. 27. 28. 29. 30, &l. 32. 33. 34. 35. S7. 38. & புகழ்த்துணையார்புகழைத் துணையாகக் கொண்டவர்-கடவுளிடம் காசு பெற்றுச் சிவனடியார்க்குத் துணை நின்றவர் கோட்புலியார் - கோள்புலி-பகைவரைப் புலி போற் பாய்ந்து பற்றிக் கொல்பவர். நேச நாயனார்-சாலியர்-அடியாரிடம் நேசம் கொண்டவர் கோச் செங்கட் சோழர் - கோ - அரசர் சிவந்த கண்ணினர் சோழர். திருநாவலுரர் - ஊர்பற்றி வந்த பெயர் ஆனாயர் - இடையர் மரபு பற்றி வந்த பெயர் குறும்பர் - மரபுபற்றி வந்த பெயர் அமர்நீதியார் - கோவணச் சண்டை நீதியை நிலை நிறுத்தியவர் எறிபத்தர் - (யானையையும் பாகரையும் மழுவால் எறிந்த பத்தர் குங்குலியக் கலயர் - குங்குலியக் கலயம் வைத்துப் பூசனை செய்தவர். மானக் கஞ்சறர்-பெருமை பொருந்திய கஞ்சாறு என்னும் ஊரினர். ஊர்பற்றி வந்த பெயர். கலிக்காமர்-ஏயர் தலைவர், கலியையும் வரவேற்பவர்-எமனையும் வரவேற்றுத் தற்கொலை செய்து கொண்டவர். சோமாசி மாறர் - பிராமணர் - சோமனது ஆசி பெற்ற மாறர் சோமயாகம் செய்தவராகலாம். 'சோமயாஜி' என்ற பட்டம் 'சோமாசி என மருவியதாகவும் கொள்ளலாம். சிறப்புலி - சிறப்புடைய புலி போன்றவர் கழற்சிங்கர் - பல்லவ அரசர் கழலை அணிந்தவர் பகைவர்க்குச் சிங்கம் போன்றவர். மங்கையர்க்கரசியார் - சம்பந்தர் இட்ட பெயராகலாம். மானி என்பது இயற்பெயர். இசை ஞானியார் - இசை ஞானம் உடையவராகலாம் குலச் சிறையார் - தம் குலத்தைச் சமணத்தில் விழாமல் சிறை தடுத்தல் செய்தவர் (?) . கண நாதர் - கணங்களை (அடியார்களைத் தயாரித்த தலைவர். காரணப் பெயர் விறல் மிண்டர் விறல்-வலிமை மிண்டர்-முரடர்