பக்கம்:பெரிய புராண ஆராய்ச்சி.pdf/25

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

26 - பெரியபுராண ஆராய்ச்சி பிற சான்றுகள் திரு ஆனைக்காக் கல்வெட்டு இதுகாறும் கூறிப்போந்த இலக்கியச் சான்றுகளாலும் கல்வெட்டுச் சான்றுகளாலும் அநபாயன் இரண்டாம் குலோத்துங்கனே என்பது ஐயமற விளங்கும். அம்முடிபை நன்கு வலியுறுத்தும் மற்றொரு கல்வெட்டுச் செய்தியை இங்குக் காண்க: இரண்டாம் இராசராசன் காலத்துத் திருவானைக்காக் கல்வெட்டில், விக்கிரம சோழ நல்லூரிலும் அநபாய மங்கலத்திலும் இருந்த சில நிலங்கள் ஆனைக்காவுடைய மகாதேவர்க்கு விற்கப்பட்டன என்ற சொல் காணப்படுகிறது. விக்கிரம சோழற்கு மகன், இரண்டாம் குலோத்துங்கன் இக்குலோத்துங்கற்கு மகன் இரண்டாம் இராசராசன். எனவே, கல்வெட்டுக் குறித்த விக்கிர சோழ நல்லூர் என்பது விக்கிரம சோழன் பெயர் கொண்டது. அதற்குப் பிற்கூறப்பட்ட அநபாய மங்கலம் என்பது அவ்விக்கிரமற்குப் பின் பட்டம் பெற்ற இரண்டாம் குலோத்துங்கன் பெயர் கொண்டது என்பன மிகவும் தெளிவாகத் தெரிகின்றன. தெரியவே, அநபாயன் என்பது இரண்டாம் குலோத்துங்கனது சிறப்புப் பெயரே என்பது அங்கைக் கனியென விளங்குதல் of Goo. இராசராசேசுவரத்துச் சிற்பங்கள் மேற்சொன்ன இரண்டாம் இராசராசன் (கி.பி. 1146-1173) இராசராசபுரத்தில் (தாராசுரத்தில் சிவன் கோவில் ஒன்றைக் கட்டினான். அங்கு அவன், அவன் கோப்பெருந்தேவி ஆகிய இருவர் உருவச்சிலைகளும் இருக்கின்றன." அக்கோவில் சிவனார் இறை அகத்தைச் சுற்றி உள்ள வெளிப்புறப் பட்டியற் பகுதிகளில் பெரிய புராண நாயன்மார் வாழ்க்கையிற் சிறப்புடைய ஒவ்வொரு நிகழ்ச்சி குறித்த உருவங்கள் செதுக்கப்பட்டுள்ளன; அவற்றின்மேல் அந்நிகழ்ச்சியை விளக்கும் சொற்கள் காண்கின்றன. நாயன்மார் அனைவர் வரலாற்றுக் குறிப்புக்களும் இவ்வளவு தெளிவாக இவ்வரசற்கு முன் காட்டப்பட்டன என்று கொள்ள எவ்விதச் சான்றும் இல்லை. ஆதலின், இவன் காலத்தில் நாயன்மார் வரலாற்று விவரங்கள் மக்கள் எல்லோர்க்கும் விளங்கக்கூடிய முறையில் வெளிப்பட்டிருத்தல் வேண்டும் என்பது தெளிவாகிறது. அங்ங்ணம் வெளியாதற்கு உறுதுணையாக இருந்திருக்கக்கூடிய நூல், இவன் தந்தை காலத்தில் பாடப்பெற்ற சேக்கிழார் திருத்தொண்டர் புராணமே ஆதல் வேண்டும் என்பது பொருத்தமன்றோ? சேக்கிழார் பெரிய புராணம் பாடுவதற்கு முன் இவனிடமே நாயன்மார் வரலாற்றைக் கூறியுள்ளார். அதன் பிறகே அரசன் அதனை அறிந்து அவரைப் புராணம் பாடச் செய்தான் என்று திருத்தொண்டர் புராண வரலாறு கூறல் முன்னரே கண்டோம் அன்றோ? அது கொள்ளத்தக்கதாயின், இரண்டாம் இராசராசன் தன் இளவரசுக் காலத்திலிருந்தே சேக்கிழாரை நன்கு அறிந்தவன்.