பக்கம்:பெரிய புராண ஆராய்ச்சி.pdf/32

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சேக்கிழாரும் அவர் காலமும் - 33 சோழர் அரசியலில் பலவகைத் துறைகளிலும் தலைவர்களாக இருந்தவர் - படைத் தலைவர், நாட்டுத் தலைவர், நாட்டை அளக்குந் தலைவர், திருமந்திரவோலைநாயகம், உடன் கூட்டத்து அதிகாரிகள் முதலியவர் 'மூவேந்தவேளான், காலிங்கராயன், கேரளராசன், தொண்டையன், வாணகோவரையன், பல்லவராயன், இளங்கோவேள், காடவராயன், கச்சிராயன், சேதிராயன், விழுப்பரையன் முதலிய பட்டங்கள் அரசரால் வழங்கப் பெற்றனர்." பெறவே, சேக்கிழார் அமைச்சுத்துறையில் முதன்மையாக இருந்தமையால் உத்தம சோழப் பல்லவராயர்' என்ற பட்டத்தைப் பெற்றனர் எனக் கோடல் பெரிதும் பொருந்தமேயாகும். சோணாட்டுத் திருநாகேச்சரம் சோழநாட்டுத் திருநாகேச்சரத்தில் சேக்கிழார், அவர் தம்பி பாலறாவாயர், அவர் தாயார் ஆகிய மூவர் உருவச் சிலைகள் இன்றும் இருக்கின்றன. அவை சேக்கிழார் அமைச்சராக இருந்தபொழுது அத்திருநாகேச்சரத்திற் பேரன்பு கொண்டிருந்தார் என்று சேக்கிழார் புராணம் செப்புகின்றதை உறுதிப்படுத்துகின்றன என்று கோடல் தவறாகாது. குன்றத்துார்த் திருநாகேச்சரம் சேக்கிழார், சோழ நாட்டுத் திருநாகேச்சரத்தைப் போன்றதொரு கோவிலைத் தம் குன்றத்தூரில் கட்டி, அதற்கு அப்பெயரிட்டார் என்று சேக்கிழார் புராணம் கூறுகின்றது. குன்றத்தூர்த் திருநாகேச்சரம் என்ற கோவிலில் உள்ள 44 கல்வெட்டுகளைக் காணின்", அவற்றில் பழைமையானவை இரண்டாம் குலோத்துங்கன் காலத்தனவேயாகும் என்பதை அறியலாம். அக்கோவிலில் சேக்கிழார்க்குத் தனிக் கோவில் இருக்கின்றது. சேக்கிழார் விழா ஆண்டுதோறும் சிறப்பாகக் கொண்டாடப் பெறுகின்றது. அக்கோவிலுக்குச் சிறப்பாகச் சேக்கிழார் மரபினரே தானங்கள் செய்தனர் என்று கல்வெட்டுக்கள் கூறுகின்றன. இவை அனைத்தையும் நோக்கச் சேக்கிழார், சோணாட்டுத் திருநாகேச்சரத்தை நினைவிற் கொண்டு தம் ஊரில் இக் கோவிலைக் கட்டியிருக்கலாம் என்று கோடல் பொருத்தமே ஆகும். சேக்கிழார் மரபினர் w - - சேக்கிழார் புராண ஆசிரியர், சேக்கிழார் காலம்முதல் இன்றுவரை அம்மரபினர் அரசர்பால் சிறப்புற்று வருகின்றனர் என்று கூறியுள்ளார்." அவர்கூற்று மெய் என்பதை நாம் முன்பு காட்டிய சேக்கிழார்-பெயர்ப் பட்டியல் உறுதிப்படுத்தலைக் காணலாம். (1 இதுகாறும் கிடைத்துள்ள கல்வெட்டுக்களில் குன்றத்தூர்ச் சேக்கிழார் மரபினரைக் குறிக்கும் கல்வெட்டுக்கள் சேக்கிழார் காலத்தவனான இரண்டாம் குலோத்துங்கன் காலம்முதலே காணக் கிடைக்கின்றன. 2 அவருக்குப் பின்னும் அம்மரபினர் சோழப் பேரரசிற் சிறப்புற்றிருந்தனர் என்பது மேற் சொன்ன பட்டியலைக் கொண்டே பாங்குற உணரலாம்.