பக்கம்:பெரிய புராண ஆராய்ச்சி.pdf/33

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

34 பெரியபுராண ஆராய்ச்சி முடிவுரை இதுகாறும் நடத்திய ஆராய்ச்சியாற் போந்த செய்திகளாவன: 1. சேக்கிழார் தொண்டை மண்டலம் - புலியூர்க்கோட்டம் - குன்றத்தூர் வளநாட்டுக் குன்றத்தூரினர்; வேளாளர் சேக்கிழார் குடியினர். அவரது இயற்பெயர் 'இராமதேவன்’ என்பதாகலாம். அவர் தம்பி பால்றாவாயர், 2. சேக்கிழார் காலத்து அரசன் அநபாயன்' என்ற சிறப்புப் பெயர்கொண்ட இரண்டாம் குலோத்துங்கன் சேக்கிழார் அவனுடைய முதல் அமைச்சர் ஆகலாம். அவர் உத்தம சோழப் பல்லவராயர் என்ற பட்டம் பெற்றவர். இளவரசனான இரண்டாம் இராசராசனிடம் நெருங்கிப் பழகியவர் ஆகலாம்." 3. சேக்கிழார் சோழநாட்டுத் திருநாகேச்சரத்தில் மிகுந்த பக்தி பூண்டவர். ஆதலால், அவர், அதற்கு அறிகுறியாகத் தமதுரில் திருநாகேச்சரம் என்ற பெயராற் கோவில் எடுப்பித்திருக்கலாம். 4. சேக்கிழாருடைய சைவ சமயப் பற்றும் நாயன்மார் வரலாற்று அறிவும் சிறந்த தமிழ்ப்புலமையும் கண்ட அநபாயன் அவரைப் பெரிய புராணம் பாடச் செய்திருக்கலாம். அல்லது. இவற்றை இளவரசனான இராசராசன் வாயிலாக உணர்ந்து அநபாயன் சேக்கிழாரைப் பெரிய புராணம் பாடச் செய்து சிறப்பளித்திருக்கலாம். சீவக சிந்தாமணிபற்றி எழுந்தது பெரிய புராணம் என்ற கூற்றுப் பொருத்தமற்றது. 5. சேக்கிழாருக்குப் பின் அவர் தம்பி பாலறாவாயர் சோழர் அரசியலில் உயர்வடைந்திருக்கலாம். சேக்கிழார் இரண்டாம் இராசராசன் காலத்திலும் (கி.பி. 1152 உயிருடன் இருந்தவராவர். - 6. பெரிய புராணத்திற் பற்றுக்கொண்ட இரண்டாம் இராசராசன், தான்கட்டிய இராசராசேச்சரம் மூலத் தானப் புறச்சுவர்களில் நாயன்மார் வரலாற்று நிகழ்ச்சிகளைச் சிற்பங்களாகச் செதுக்குவித்தான் போலும். 7. சேக்கிழார் பாடிய திருத்தொண்டர் புராணமே இரண்டாம் இராசாதிராசன் காலத்தில் (ஏறத்தாழக் கி.பி. 1174-இல் திருவொற்றியூர்க் கோவிலில் நடந்த பங்குனி உத்திர விழாவிற் படிக்கப்பட்டதாகலாம். 8. சேக்கிழார் புராண ஆசிரியர் சைவ சமய ஆசாரியராகிய புகழ்பெற்ற உமாபதி சிவாச்சாரியர் என்னல் பொருந்தாது. அதனை எழுதியவர் இவரின் வேறானவர். ஆயினும் அவர் கூறும் சேக்கிழார் பற்றிய செய்திகள் பெரும்பாலும் கல்வெட்டாராய்ச்சிக்குப் பொருந்துவனவாக இருந்தலால் அவர், சேக்கிழார் வரலாறு நாட்டில் நன்றாய்ப் பரவி இருந்த காலத்தவர். உமாபதி சிவத்திற்கு முற்பட்டவர் என்னலாம்.