பக்கம்:பெரிய புராண ஆராய்ச்சி.pdf/36

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

3. சுந்தரர் காலம் பெரிய புராணத்திற்குச் சிறப்புடை முன்னூல்கள் இரண்டு. அவை 1. சுந்தரர் பாடிய திருத்தொண்டத்தொகை, (2) நம்பியாண்டார் நம்பி பாடிய திருத்தொண்டர் திரு அந்தாதி என்பன. இவற்றுள் சுந்தரர் தொகையே காலத்தால் முற்பட்டது என்பதை அனைவரும் அறிவர். அத்தொகையுள் 63 நாயன்மார் பெயர்களும் குறிப்பிடப் பெற்றமையாலும் அவருள் சுந்தரரும் ஒருவர் ஆதலாலும் அவர் காலத்தைக் கண்டறிவோமாயின், 63 நாயன்மாரது இறுதிக்கால எல்லையை அறிந்தவர் ஆவோம். இருவிதக் கருத்துக்கள் ஆராய்ச்சியாளர் பலர் சுந்தரர் காலத்தை அறிய முயன்றுள்ளனர். அவர்கள் முடிபுகள் இருவகைப்படும். அவையாவன: 1. சுந்தரர் காலத்து அரசன் கழற்சிங்கன்’ என்ற பல்லவன் என்பது தொகையிற் குறிக்கப்பட்டுள்ளது. கழற்சிங்கன் என்ற தொடரில் கழல் என்பது அடைமொழி சிங்கன் என்பது இயற்பெயர். சிங்கன் என்ற இறுதிச் சொல்லுடன் இருவர் பல்லவ மன்னராக இருந்தனர்; ஒருவன் நரசிங்கன்ஒ (கி.பி. 650-668) மற்றவன் நரசிங்கன் II எனப்பட்ட இராச சிங்கன் கி.பி. 687-720). இவருள் முதல்வன் காலத்தில் அப்பர், சம்பந்தர் வாழ்ந்தனர். எனவே சுந்தரர் இராச சிங்கன் காலத்தவராகவே இருத்தல் வேண்டும். 2. பல்லவருள் கோப்பெருஞ் சிங்கன் முதலாகச் சிங்கன் இறுதிபெற்ற பெயர்கள் உண்டு. கோப்பெருஞ்சிங்கன் என்பவன் பிற்காலத்தில் ஆண்டவன். கி.பி. 7, 8, 9ஆம் நூற்றாண்டுகளில் இவ்விதச் சிங்கப் பெயரும் கழல் என்ற தூய தமிழ்ப்பெயரும் கொண்ட பல்லவப் பெயர்கள் கிடையா. ஆகவே, கழற்சிங்கன் என்பது காரணப் பெயராக இருத்தல் வேண்டும். இங்ங்ணம் கொண்டு சுந்தரர் குறித்த பல்லவனைப் பற்றிய குறிப்புக்களை ஆராயின், அக்குறிப்புக்கள் பொருந்தப் பெற்ற பல்லவன் மூன்றாம் நந்திவர்மன் (கி.பி. 840-865) என்று கூறலாம்".