பக்கம்:பெரிய புராண ஆராய்ச்சி.pdf/50

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திருமுறைத் தொகுப்பு 5置 உண்டான கல்வெட்டுக்களை ஆராயின் பல கோவில்களில் திருப்பதிகம் பாடப் புதிய ஏற்பாடுகள் செய்யப்பட்டன என்பது வெளியாகின்றது. 3. மேலும் இராசராசன் தான் கட்டிய இராசராசேச்சரத்தில் தேவாரம் பாடிய மூவர் திருமேனிகளையும் வைத்துப் பூசித்தமையும் முறையாக நாள்தோறும் தேவாரம் ஓத 48 ஒதுவாரை வைத்தமையும்" சிந்தித்துப் பார்ப்பின், இராசராசன் காலத்தில் திருமுறைகள் சிறப்புப் பெற்றன என்பது ஐயமற விளங்கும் செய்தியாகும். 4. இராசராசன் காலத்தவரான நம்பி 63 நாயன்மார் வரலாறுகளையும் சுருக்கமாகத் தமது 'திருத்தொண்டர் திருவந்தாதி"யிற் பாடியுள்ளாார்: சம்பந்தரைப்பற்றி 6 தனிச் சிறு நூல்கள் பாடியுள்ளார். அவற்றில் சம்பந்தரைப் பற்றிய எல்லாக் குறிப்புகளையும் விளக்கமாகக் குறித்துவிட்டார். அவர் திருநாவுக்கரசரைப் பற்றியும் ஒரு சிறு நூல் பாடியுள்ளார். அதனில் அப்பர் வாழ்க்கைக் குறிப்புகள் யாவும் தந்துள்ளார். அவர் தம் அந்தாதியில் சுந்தரர் வரலாற்றை 18 இடங்களிற் சுருங்கக் கூறி விளங்க வைத்துள்ளார். இவ்வரலாற்றுக் குறிப்புகளுட் பெரும்பாலன திருமுறைகளைக் கொண்டே கூறத் தக்கவை. ஆதலின், நம்பி திருமுறைகள் ஏழனையும் நன்கு முறைப்படுத்தி ஆராய்ந்தவராதல் வேண்டும். இங்ங்னம் திருமுறைகளை முறைப்படுத்தி ஆராய்ந்தபிறகே அக்காலத்தில் வழங்கிய நாயன்மார் வரலாற்றுக் குறிப்புகளையும் நன்கு தொகுத்த பிறகே சேக்கிழாரும் பாராட்டத்தக்க திருத்தொண்டர் திருவந்தாதியைப்" பாடி முடித்தாராதல் வேண்டும். இம்முடிபையே திருமுறைகண்ட புராணமும் ஆதரித்தல் காண்க." இவை அனைத்தையும் நோக்க, நம்பி திருமுறைகள் தொகுத்தவர் எனக் கோடல் பொருத்தமேயாகும். திருமுறைகள் தில்லையில் இருந்தனவா? நம்பி மூவர் திருமுறைகளையும் முறைப்படுத்தினார் எனின், அவை அவருக்கு எங்ங்ணம் கிடைத்தன? என்பது அடுத்த கேள்வியாகும். திருமுறை பாடிய மூவரும் தாம் தாம் சென்ற பதிதோறும் பாடிய பதிகங்களைத் தொகுத்திருப்பார் என்பதில் ஐயமில்லை; பாடல் பெற்ற தலத்தில் அத்தலத்துக்குரிய பதிகம் அல்லது பதிகங்கள் வழக்கில் இருந்திருத்தல் கூடும். ஆயின் எல்லாப் பதிகங்களும் ஓர் இடத்தில் இருப்பதெனின், அவ்விடம் அம்மூவராலும் ஏனைய தளிகள் யாவற்றிலும் சிறந்ததெனக் கொண்டாடப் பெற்றதாக இருத்தல் வேண்டும். அம்மூவர் காலத்திலும் அத்தகைய சிறப்புற்ற இடமாகக் கருதப்பெற்றது தில்லையில் உள்ள கோயில் என்ற தனிச் சிறப்புப்பெற்ற கூத்தப்பெருமான் கோவிலே ஆகும். அச்சிறப்பு நோக்கியே முதற் பராந்தகன் தில்லைச் சிற்றம்பலத்தைப் பொன் வேய்ந்து சிறப்பித்தான்" கோச்செங்கணான் முதல் பிற்காலச் சோழர் அனைவருமே கூத்தப்பிரானைத் தம் குலநாயகன்" என்று பாராட்டி, கோவிலைப் பொன் மயமாக்கினமைக்கு